பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344


பணம் புடையல்

இதுவரை தலையில் சூடப்படுவது காணப்பட்டது. மார் பிலும் அணிந்தனர். குடிப் பூவின் சின்னமாகவே அணிந்தனர். இம்மாலை புடையல் என்னும் சொல்லைப் பெற்றது. பனம் பூ மார்பு மாலையைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் புடையல்' என்னும் சொல்லே கையாளப்படுகின்றது. அத்துடன் இப் புடையல் குறிக்கப்படும் இடங்களில் பெரும் பகுதியிலும் உடன் சேர்த்துக் கழல் அணிந்த கால் குறிக்கப்படுகின்றது. "இரும்பனம் புடையல் ஈகைவான் கழல்’ (பதிற் : 42 : 1) "புடையல் அம் சுழற்கால்" (அகம் : 295 : 1.1) -எனப் புடையலுடன் ஈகையங் கழல்' என்னும் தொடரும் இணைத்துப் பாடப்பட்டுள்ளமை குறிக்கத்தக்கதாகும். இவ்வாறு அகநானூறு புறநானூறு, பதிற்றுப்பத்து என்னும் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்திகளைத் தரும் சங்க இலக்கிய நூல்கள், இத்தொடர்களை இணைத்துப் பாடுகின்றன. பரணர், அவ்வையார், மாமூலனார் அரிசில் கிழார், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் பெருமக்கள் இவ்வாறு, பாடியுள்ளோர் ஆவர். இன்னோர் வரலாற்றுச் செய்திகளையும் மரபுக் கருத்துகளையும் வழங்கும் பாங்குடையவர்கள். போர்க்களத்தில் போரிட்டுக் குருதி தோய்ந்துள்ளதைப் பாடும் இடத்திலும், - - "இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக் குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே' 一5TáT இணைத்துப் பாடப்பட்டது. இவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் இவ்விரண்டும் இணைந்து வருதல் ஒரு கருத்தை உட்கொண்ட தாகும். . - சேரர்க்குரிய வீரச்சின்னங்களில் இவ்விரண்டும் இணைந்த - மரபாகத் திகழ்ந்துள்ளன. இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகை யில் அவ்வையார் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் : . "தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்?? தினது. 1 பதிற்று : 57 :2, 3. 24pώ : 99: 4, 5,