பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349


அமைந்தது. இவை எக்காரணங்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட் டிருப்பினும் எவ்வகை ஒருமைப்பாடும் இல்லை. இதில் ஒருமைப் பாடு இருக்கவேண்டும் என்பதன்று; இருந்தால் நல்லது. ஆனால், இவ்வகை ஒரு குறைபாடாக இல்லாமல் இருக்கலாம். மூன்றும் மூவர் முடிமீதும் தனித்தனியாகச் சூடப்பட்டன தாம். அவ்வாறே சூடப்பட்டு மூன்று முடிகளும் ஒரிடத்தே கூடி ஒரோவழியேனும் தோற்றமளித்திருக்கலாம் அன்றோ? இவ்வழி யிலாவது ஒர் ஒருமைப்பாட்டைத் தோற்றியிருக்கலாம் அன்றோ? அரிதாகவேனும் அவ்வாறு காணப்படாமை மிகக் கவல்வை எழுப்புகின்றது, முப் பூக்களையும் முறையே மும்முடிகளில் ஒரு சேரக் காணவில்லையே என்னும் ஏக்கம் எழுகின்றது. ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருமைப்பாடுள்ளவர்கள் பால் இந்த ஒற்றுமை என்னும் ஒருமைப்பாடு அமையாமற் போயிற்றே என்று அவலங்கொள்ள நேர்கின்றது, இக்காலத்தில் நமக்கு எழும் இக்கவல்வும் ஏக்கமும் அவலமும் அக்காலத்துப் புலவர் உணர்விலும் இழையோடி யிருந்தன. இரண்டு சோழமன்னர் தத்தம் முடிமேல் தமது ஒரே குடிப் பூவை-ஆத்தியைச் சூடிக்கொண்டு நிற்கின்றனர். கோ ஆர் கிழார் பார்க்கின்றார்; மகிழ்ச்சி கொள்ள வகையில்லை. ஏனெனில் பகைத்து நிற்கின்றனர். அவர்க்கு எழுந்த உணர்வு கவலையில் தள்ளாடியது. மற்றொரு காவிரிப்பூம்பட்டினத்துப் புலவர்; காரிக் கண்ணனார் என்னும் பெயரினர். ஓரிடத்தில் இரண்டு வகைப் பூக்களைச் சூடிய முடியினர் ஒன்று கூடி அமர்ந்து அளவளாவிக் கொண்டுள்ளனர். புலவர் பார்த்துப் பூரித்துப் போனார். வியப்பால் கண்களை அகலவிழித்துப் பார்த்தார். ஒரு மன்னன் ஆர் சூடிய பெருந்திருமாவளவன் என்னும் சோழன். இணைந்திருந்தவன் வேம்பு சூடிய பெருவழுதி. புலவர்க்கு மகிழ்ச்சி கொப்பளித்தது. 'பலராமனும் கண்ணனும் கூடியிருப்பதுபோலக் காட்சி அளிக்கின்றீர்கள். இதனினும் இனிய காட்சி வேறு உண்டோ!' -என்றார். தமிழ்க் குலத்தில் பிறந்தோர் உடன் பிறந்தோராக வாழவேண்டும் என்னும் கருத்திலேயே ಖTvಣಣ யும் கண்ணனையும் உவமை கூறினார். உடன் பிறப்புகள் வல்லவர்