பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356


தான் கணக்கற்ற எண்ணிக்கைக்கு மலர்ப் பெயர்களையே குட்டி ளர் போலும். ஆயினும், இக்காலச் செடியியலார் கணக்கற்ற ಥಿಣNau ஒரு தொகுப்பில் முடக்கினர்; தொகுப்பை வகுப்பில் மடக்கினர்; இனத்துள் ஒடுக்கினர்; அதனையும் குடும்பத்துள் அடக்கினர். ஒரே குடும்பத்து மலர்களுள்ளும் எத்துணை வேறுபாடு? மாறுபாடும் உண்டு. இருப்பினும் வேறுபாடும் மாறுபாடும் உயிரினங்களைக் கவர்வதற்குத் தடையாகவில்லை. மணத்தாலும் வண்ணத்தாலும், வடிவாலும் வனப்பாலும் மாந்தர்தம் உள்ளத் தில் தூண்டில்போட்டு உணர்வைச் சுண்டி இழுக்கும் செயல், மலர்களின் பிறவித்தொழில். மாந்தரது-அவரிலும் மகளிரது கண்ணில் புகுந்து மனத்தை மயக்கித் தலையிலும் மார்பிலும் தவழ்பவை மிகப் பல அல்ல. மலர்களின் பெருக்கத்தை நோக்க இவ்வெண்ணிக்கை சிலவாகும். சிலவானாலும் மார்பில் ஏறி நிற்பதும் தலையில் அடிவைத்து அமர்வதும் பெருமைக்குரியவைதாம். இப்பெருமைக்கு ஆளாக்க மாந்தர் மலர்களைக் கொய்யும்போது ஆர்வத்தைப் பெய்வர்; சூடும்போது மகிழ்வைச் சுரப்பர்; வாடியவுடன் அவலத்தை வழங்குவர். விரும்பி ஏற்றதை வீசி எறிதல் அவலமன்றி வேறென்ன? 'சூடினர் இட்ட பூ'-என்றார் நல்லந்துவனார். கூடிப் புணரப்பட்ட குமரியின் எழில் நலத்தை உண்டவன். ஒடிப் பிரிந்து மறந்துவிட்டால், உண்ணப்பட்ட அவள் அவலத் தின் தனி உருவம் ஆவாள். - இவ் அவலத்து அணங்குகளைத்தாம், " கூடினர் புரிந்து குணன்உணப் பட்டோர் தடினர் இட்ட பூவோர் அன்னர் T -என்றார். பொதுவில் மாந்தர் பயன்கொண்டு பின்னர் தள்ளிவிடும் வகையை நோக்கினால், மலர்கள் கழிபட்ட கைம்பெண்கள். 1 கலி: 2:12, 13,