பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358


இலக்கிய அறிமுகம் - . புலவர் நாவிற் பொருந்திய பூக்கள் தமிழ் இலக்கியத்தில் நூறு எண்ணையும் கடந்து நிற்கின்றன. சங்கக் கவிஞர் முதல் நம் தங்கக் கவிஞர் வரை யாவரும் மலர்களை இலக்கியங்களில் பதித்துள்ளனர். அவை பெற்றுள்ள அறிமுகங்களின் வகையாலும் முறையாலும் இலக்கியங்களில் பல உத்திகள் உருவாயின. முன் கண்ட அக, புற இலக்கண வாய்ப்போ, வேறு ஏதும் தனித் தன்மையோ பெறாமல் இலக்கியங்களில் அறிமுகம் பெற்றுள்ள மலர்கள் பல. அவற்றை அறிமுக மலர்கள்’ என்று குறிக்கலாம். இவற்றுள் முதன்மைப் பூ முடிவுப் பூ என்றில்லை. இலக் கியத்தில் யாவும் ஒன்றே. ஆயினும், இலக்கியங்களில் பெற்றுள்ள இடமிகுதி, வண்ணனைப் பாங்கு, உவமை வாய்ப்பு, உருவக முத்தாப்பு முதலிய ைகொண்டு ஒருவகையாக அடுத்தடுத்து வரிசை கொடுக்கலாம். இவ்வரிசை துல்லியமான வரிசையன்று; தோராயமானதுதான். இதற்கே ஆழ்ந்த ஆய்வும் தேர்ந்த கனக்கிடும் விடுபடாக் கூர்த்த நோக்கும், முறைதெரி கவனமும் கொள்ள வேண்டும். இவற்றால் ஒரு முறையான வரிசை அமையும். இவ்வரிசையில் அறிமுக மலர்கள் அமையும். புலவர்தம் பட்டறிவுப் பசுமையால், சொற்சித்திரத்தால், புலமைப் பூரிப்பால், நுழைபுலச் சிறப்பால் மேலோங்கித் தோன்றும் அறிமுக மலர்கள் பல. அவற்றுள் முந்திக்கொண்டு மலர்ந்தது காந்தட் யூ. | கை மலர் (காந்தள், தோன்றி, கோடல்) முந்தித் தோன்றி - முந்தி நிற்கும் 钴· ஆம், காந்தள் ஒருவகையில் முந்தி நிற்கும் 电 ஆகும் தமிழ்நாட்டைப் பூக்காடாகக் காட்டக் கபிலர் இலக்கியம் தொடுத்தார் அன்றோ? 99 பூக்களை அடுக்கியவர், "..............வள்ளிதழ் ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்' - எனக் காந்தளை முதலில் வைத்தார். i • * : 61.