பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366


கோடல்

சொல்லில் கோடல்

கோடல், கோடை என்னும் இரண்டின் முதல்நிலை கோடு’ என்பது. கோடு - அல்; கோடு - ஐ எனப்பிரிபடும். கோடலின் இறுதி நிலையாகிய அ ல் தொழிற்பெயர் இறுதி அன்று. தொழிற்பெயர்த் தொடர்பில் அமைந்த பெயர் இறுதியாகும். இதுபோன்று இறுதிகொண்ட பெயர்களாக 'மெளவல், செம்மல், சேடல் என்பன இங்கு கருதத்தக்கன. இவை போன்று முல்லை, குல்லை. முதலியவை தம் ஐகார விகுதியால் 'கோடை என்பதற்குச் சான்றாகின்றன. இறுதிநிலை இவ்வாறு அமைய, கோடு’ என்னும் முதல் நிலை தரும் பொருள் யாது? கோடு, பலபொருள் ஒரு சொல். மரக்கொம்பு, வளைவு, மலை முகடு, யானைக் கொம்பு (மருப்பு), சங்குமுதலிய பலபொருள் களைக் குறிப்பது. இவற்றுள் இங்கு யானைக் கோடு, சங்கு என்னும் இரண்டும் இயைபு உடையவை. இவ்விரண்டும்வெள்ளை நிறத்தன. காந்தளில் வெண்மை நிறங்கொண்ட இதழ்களைக் கொண்டது வெண்காந்தள். இலக்கியங்கள் நிறத்தாலும் ಖಟ್ಲ..!T லும் யானை மருப்பையும் சங்கையும் இயைத்துப்பேசுகின்றன. இவற்றால் கோடல், கோடை என்பன வெண்மை நிறங்குறிந்து எழுந்த பெயர்களாகும். அகநானூற்றில் உம்பற்காட்டு இளங் கண்ணனார் என்பரர், с ' வரிவெண் கோடல் வாங்குகுலை வான் gייr -என்றார். இவ்வடியில் வெண்கோடல் வெண்மைநிறத்தை நாட்டுகின்றது. இறுதிச்சீர் வான் பூ வெண்மைக்கு முத்திரையிடுகின்றது. இவ்வெண்மையும் வரியாக-கோடாக அமையும் என்பதை வரிவெண்கோடல்” என்னும் அடைமொழி குறிக்கின்றது. - மேலும், வெண்மை அடைமொழியுடன் குறிக்கப்படும் இக்கோடல் செம்மை அடைமொழியோடு சொல்லப்படவில்லை, எனவே, கோடல், கோடை' என்னும் பெயர்கள் வெண்கள் ந் தளுக்கே உரியவை. இதனை, அடுத்து வரும் இலக்கிய விளக்கங் களாலும் தெளியலாம். - 1 அகம் : 264 : ,ே