பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371


'கொடியியலார் கைபோல் குவிந்த மலர்; அரவு உடன்றவைபோல் விரிந்த குலை; குடைவிரிந் தவைபோலக் கோலு மலர்'T -என்று தொகுத்தார். இவ்வரலாற்றுக் கூறாகிய இரு பாடல்களின் அடிகள் தாம் கோடல் என்னும் வெண்காந்தளை அடையாளங்காட்டுபவை. குடையளவாகப் பூத்து நிற்கும் நிலையே இதன் நிறைநிலை. இவ்விருவர் பாடல்கள் இன்றேல் கோடலை அடையாளங் கொள்ளல் அரிது. எனவே, இவையிரண்டும் சிக்கல் தீர்க்கும் பாடல்களாகின்றன. பொதுவில் இப்பூ மணமுள்ளதாகப் பேசப்படுவது. இதன் மணம் கருதியும் எழில் கருதியும், பல்வகை ஆடவரும் மகளிரும் சூடி மகிழ்ந்தனர். பெரிதும் கண்ணியாகவும் கோதையாகவும் சூடினர். "கோடல் நீடிதழ்க் கண்ணி' -எனத் தலைமக்கள் சூடி யதை நெடுநல்வாடை (56) காட்டுகின்றது. " ...... கோடல் வாங்குகுலை வான்பூ பெரிய சூடிய கவர்கோல் கோவலர்' -என்னும் அக நானூற்று (264 : 2,3) அடிகளால் ஆநிரை காக்கும் இடையர் சூடியதை அறிகின்றோம். இப்பூவிலும் பெரிய பூவாகத் தேர்ந்து சூடினர் போலும்; பெருமளவிலும் சூடினர் போலும், கோவலர் போன்று பலரும் சூடியிருப்பர். ஆனால், கோடற் பூ குறவர் குடிக்குரிய பூ, மூலத்தால் குறிஞ்சி நிலப் பூ அன்றோ? இக்குடியில் ஒருகால் தலைவனாக விளங்கியவன் ஏறைக்கோன் என்பான். இவன், 'கோடற் கண்ணிக் குறவர் பெருமகன்'2 - எனப்பட் டான். இதனையும் குறக்குலப் புலவராம் குறமகள் இளவெயினி பாடியிருப்பது இப்பூ குறக்குடிக்குரிய பூ என்பதைக் குறிப்பதாகும். கோடல், ஏறைக் கோனது அடையாளப் பூவாக விளங்கியது. 1 பரி : 20 ; 98-100 2 чpià ; 157 ; 7.