பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450


4. கொங்கை மலர். கோங்கு. பொன் நிறம் வாய்ந்த பூக்களின் வரிசையில் கோங்கு இடம் பெற்றது. கோங்கின் பொன்மருள் பசுவி' எனப்பட்டது. இதன் புறவிதழ் பொன் நிறமற்றதாயினும் முகை ஆடகப் பொன்னைக் கட்டிவைத்த பொற்கிழி எனப்பட்டது. . இது விரிவது, 3 is ... ... , ... ... கொழுங்கோங்கு துரங்கு - ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும்'2 -என்றார் குமரகுருபரர். விரிந்த மலர் குடைபோன்றது. இதனையும், கேரங்கு பொற் குடை கொண்டு அவிழ்ந்தன” - எனப். பொன் குடையாகப் பாடினார் யசோதர காவிய ஆசிரியர். நல்லந்துவனார்க்கோ, 'தண்ணறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம் பொன்னணி யானைபோல் தோன்”3 றிற்று.- இவ்வா றெல்லாம் இம்மலர் பலவகையிலும் பொன்னாகக் காட்சி தருவது. கொங்கு என்றால் பொன். கொங்கு நீண்டு 'கோங்கு ஆனது போலும். இத்துடன் அம் விகுதி சேர்த்துக் கோங்கம்' எனப்படும். ‘துரு' என்னும் சொல்லும் பொன்’ என்னும் ஒரு பொருள் தரும். நிர்ப் பூக்களில் நீலம், நீல + உற்பலம் = நீலோற்பலம் எனப்படும். கோங்கைப் பொன் நிற உற்பலமாகக் கொண்டு 'துருமோற்பலம்’ என்னும் பெயர் சூட்டப்பெற்றது, இப்பெயர் மற்றொரு காரணத்தாலும் அமைந்ததாகலாம். துருமம்' என்பது மரங்களின் பொதுப்பெயர். நிலம், நீரில் தோன்றும் உற்பலம். கோங்கு மரத்தில் தோன்றுவதால் துருமம்-உற்பலம் = துருமோற் பலம் என்றாகியிருக்கலாம். இது வடமொழிப்பெயர். பொன்னைக் குறிக்கும் சொற்களில் 'காரம் என்பதும் ஒன்று. கோங்கின் முகை கன்னிமைப் பருவ உறுப்பாகிய மார்புக்கு உவமை கூறப்படுவது. இவ்வகையில் 'கன்னியின் பொன்’ என்று 1 ஜங் : 387 1, 2. 3 கவி : 42 : 16, 17. 2 մ. ւ?, * 10: 3, 4,