பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

461


இலவத்தின் மலர் நிறம் செம்மை. மஞ்சளும் செம்மையும் வேறுபட்ட நிறங்கள்.இவ்வேறுபாட்டைப் பகையாகக்கொண்டார். இதற்கு உரைவகுத்த பரிமேலழகரும் நிறத்தாற் பகைத்த மலரை யுடைய இலவம்’ என்றார். மேலும் பருவம் இல்லாத கோங்கு என்று அடைமொழி கொடுத்து, அடுத்துப் பகை' என்று இலவத் திற்கு அடைமொழி கொடுத்திருப்பதால் மலரும் பருவம் கருதிப் பகை கூறப்பட்டதாகும். பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பார், 'ஆனேற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும்' - - என்று 'எதிரிய இலவமாகக் குறித்தார். இங்கு எதிரிய' என்றதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், "பூக்கள் காலத்தை எதிர்கொண்ட இலவம்’ -எனக் காலத்தை - பருவத்தைக் குறித்துக் காட்டியதும் இங்கு நோக்கத்தக்கது. எனவே, பருவமில்லாத கோங்கிற்குப் பருவமுடைய இலவம் பகையாயிற்று. மேலும் மர வளர்ச்சியிலும் கிளை அமைப்பிலும் கொண்ட வேறுபாடுகளும் பகைக்குத் துணைக் கரணியங்களாக ፴፱ ፻፹LD . பகைமலராயினும் கோங்குடன் கொண்ட பிற இணைப்பு களால் இலக்கிய நிலையில் கோங்கை அடுத்து இலவம் காணத் தக்கதாகின்றது. 5. நெருப்பு மலர். இலவம் 'இலவம் பஞ்சில் துயில்" 2 என்றார் பி. ற் கால அவ்வையார். துயில்வதற்கு இனிய மெத்தையில் துயில்கின்றோம். பஞ்சு மெத்தையிலா துயில்கின்றோம்? தேங்காய் நாரில் துயில்கின் றோம்; துணிகள் திணிக்கப்பட்ட முண்டு முடிச்சு மெத்தையில் துயில்கின்றோம்; செயற்கை நுரைப் பாளத்தில் துயில்கின்றோம். 1. கலி 36 :5, 2. ஆத்தி குடி : 26.