பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

477


230, 240, 250, 260, 270, 290, 310, 320, 340, 350, 360, 370. சில போகமற்றவை பத்தளவு எண்களுள்ள பாடல்களிலும் அவற்றிலும் பெரும்பகுதி பத்து அடுக்கிலும் அமைக்கப்பட்டுள்ளமை இயற்கையில் அமைந்த தா, தொகுத்தோர் ஒரு கவனங்கொண்டு அமைக்க அமைந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. புன்னை மரங்கள் செறிந்த இடங்களைக் குறிக்கும் தொடர் கள் இவை: "புன்னைக் கானல்" "புன்னைத்துறை” "புன்னைப் பொதும்பர்' 'புன்னைய நறும்பொழில்’ 'புன்னைய முன்றில்" "புன்னையங்கொழுநிழல்' -இவைகொண்டும் புன்னையால் நெய்தல் நிலப் பெறுஞ்சிறப்பையும் அறியலாம். இம்மரம் மிக உயரமாக வளர்வதன்று. அடிமரம் சற்றுக் கருமை நிறத்தில் ஒரளவு சுருச்சரை கொண்டது. 'பராரைப் புன்னை' என்றது போன்று அடிமரம் சற்று பருத்தது. அடி மரம் 'நெடுங்காற் புன்னை', 'கொடுங்காற் புன்னை', 'முடத் தாள் புன்னை' என்பனவற்றிற்கேற்பச் சற்று நீண்டதாகவும் வளைந்தும் தோன்றுவது. கிளைகளும், ‘கருங்கோட்டுப் புன்னை', 'நெடுஞ்சினைப் புன்னை” என்றமைக் கேற்பக் கருமையாகவும் நீண்டும் தோன்றும். இக்கருங்கிளையில் தழைத்த இலைகளையும் அரும்பு களையும் மலர்களையும் புலவர் உவந்து கண்டு சுவைத்துப் பாடியுள்ளனர். இவற்றின் வேறுபட்ட நான்கு நிறங்களால் இம் மரம் ஒரு நான்மணிக்கடிகை போன்று பாடப்பட்டது. நிறங்களில் மனம்பதித்துப் பாடுதலில் வல்ல உலோச் சனார் பார்வையில் மலர்ந்த புன்னை பதிந்தது. மரம் கரு நிறம், இலை கரும்பச்சை-நீல நிறம்; அரும்பும் மலரும்வெண்மை: தாதுத் தூள் பொன் நிறம். இவற்றை வைத்து,