பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482


"பொற்கிழி விரித்தன சினைப் பொதுள்வ புன்னை" 1 - என்று, பொன் பொதியை அவிழ்த்த காட்சியாக்கினார். இதழ் களின் வெண்மையைப் பொதியை மூடிய வெண்மைப் பட்டுத் துணியாகவும், முகை விரிதலை மலர்ச்சியாகவும், உள்ளே மஞ்சள் நிறத்தாது தோன்றுவதைப் பொதிந்த பொன்னாகவும் பாடிய நயம் சுவைத்தற்குரியது. இப்பொன்தாது, மலரில் நிறையந் தோன்றுவதால் மலரின் நிறமே பொன்னாகத் தோன்றும். இவ்வாறு மலர், தாதினால் பொன் நிறம் கொண்டதை, "புன்னை நறுவி பொன்னிறம் கொளா? என்று கொளா என்னும் சொல்லமைத்துக்காட்டினார் மோசிக்கரையனார் என்பார். இதனையே புன்னையிற் பொன் உண்டாகும் என்னும் பொருளில் "பொன்படு புன்னை' எனப்பட்டது. - - பொன்னிறங்கொண்டு விரிந்து ஒளிரும் மலர்க்கொத்தி டையே ஒரு நாரை வந்து அமர்ந்தது. வெண்மையான நாரை நிறைமதிபோன்றும், பொன்னேந்திய புன்னை மலர் விண்மீனாக வும் இளங்கோவடிகளார்க்குத் தோன்ற, "திரைமதியும் சீனுமென அன்னம்ள்ே புன்னை அரும்பிப் பூத்த' -எனப் பாடினார். வெள்ளிநிற மலர் பொன்னிறம் பெற்றுப் பொன்மலர் நாற்றம் பெற்றது போன்று மனத்தையும் பரப்பும். இம்மலர் மணத்தால் "கடிமலர்ப் புன்னை" என்றும், தேர்வால் 'ஆய்மலர்ப் புன்னை' என்றும், பொன்னொளியால், திகழ்மலர்ப் புன்னை' என்றும் கலித்தொகையில் அடைமொழிகள் பெற்றது. இம்மணம் பக்க மெல்லாம் பரவிக் கமழும். கடற்கரையில் பரதவர் காயவைக்கும் மீன் புலால் மூக்கை மூடிக்கொள்ளும் அளவில் கெடுநாற்றத்தைப் பரப்பும். அதனைப் புன்னைமலரின் மணம் போக்கும். புலால் அகற்றும் பூம்புன்னை' (திணை: நூ. 1) 'கடும்புலால் புன்னை கடியும் துறைவ" (திணை நூ : 43:1) "கயற்புலால் புன்னை கடியும் (நாலடி : 97 :2, 3) 1 கம்பு கார் : 74 : 4, 8 சிலம்பு : 29 2 அகம் : 260 : )