பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485


"காதல் தலைவ! இன்று ஏன் புதிதாக இளைய புன் னையின் அடியில் நிற்கின்றாய்? இப்புன்னையைப் பற்றி நீ அறியாய். இஃது ஒரு தனிச்சிறப்புடையது. இஃது எங்களால் வளர்க்கப்பட்ட புன்னை. அவளும் நானும் தோழிமாரும் சிறு குழந்தைகளாய் இப்பக்கம் விளையாடினோம். அப்போது ஒரு புன்னைக் கொட்டையை விளையாட்டுப் போக்கில் மணலுக்குள் அழுத்திப் புதைத்தோம். அதனை மறந்தும் போனோம். ஒருநாள் அது முளைவிட்டது. எங்களது பழைய நினைவால் அதன்மேல் எங்களுக்கொரு பரிவு எழுந் தது. எங்களுக்கு ஊட்ட வந்த நெய்யையும் பாலையும் அதற்கு ஊட்டினோம்; ஊற்றினோம்; ஊற்றி வளர்த்தோம். ஒருநாள் எங்களது அன்னை இவ்வளர்ப்பைப் பார்த்தாள். மிக மகிழ்ந்தாள். எங்களால் வளர்க்கப்பட்ட அதனை மிக மதித்தாள். தன் மகளால் வளர்க்கப்பட்டது என்று பரிவு கொண்டாள். மிக விரும்பினாள். எங்களிடம், 'உங்களால் வளர்க்கப்பட்டதால் இப்புன்னை எனக்கு உங்களைவிடச் சிறந்ததாகப் படுகின்றது. உங்களால் வளர்க்கப்பட்ட இவள் உங்களினும் இளையளாகையால் உங் கட்கு தங்கையாவாள். -என்று சொன்னாள். அதனால் இப்புன்னை எங்கள் தங்கை. உனது குமரிக்கும் தங்கை. தங்கை இருக்க அவள் முன்னே கூடிக்களிப்பாரோ? அம்மவோ! உன்னோடு இப் புன்னையடியில் கூடிக் குலவ அவள் நாணமாட்டாளா? நினைக்கவே எனக்கும் நாணமாக உள்ளது. வேறு தழைத் துள்ள மரத்தடியா இல்லை? -ான்று நயம்பட உரைத்தாள் தோழி, தோழி பதித்த சொற்களைக்கொண்ட செய்யுள் இது : "விளையா டாயமொடு வெண் மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப தும்மினும் சிறந்தன்று துவ்வை ஆகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே