பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532


இக்காயாவின் புதிய மலர் போன்ற நிறத்தையுடைய இக்குமரி அத் தூய்ைைமயான வெள்ளை நிறக் காளையை அடக்கியவனுக்கு உரியவள்' - என இளங்கோவடிகள் குறித்துள்ளார். இதற்கும் மேலாக, பளபளக்கும் கருநீல நிறத்திற்குச் சான்றாகக் குறிக்க எழுந்த புலவர்கள் இக்காயாவையே எடுத்துக்காட்டினர். முல்லைக்கலியுள் பூக்களைக்கொண்ட க ண் ணி யை வண்ணிப்பவர், 'மணிபுரை உருவின காயா’2 - என்று நிறங் குறித்துக் காயாவை வைத்தார். பல தெய்வங்களின் நிறத்தை வைத்து மலர்களை அறிமுகம் செய்யும் பரஞ்சோதியார், "அங்கதிர் ஆழியான்போல் அலர்ந்தன விரிந்த காயா" -என்றார். நிறத்தாற் சிறக்கும் இம்மலர் பூத்துத் தோன்றுங்கால் கருநீலக் காடாகத் தோன்றும். உதிர்ந்து கிடக்குங்கால் கருமைக் கம்பளமாகக் காட்சி தரும். இம்மலர் மிகப் பரவலாகச் சூடிக்கொள்ளப்படவில்லை. முல்லைநிலத்து மக்கள் அந்நிலத்துப் பூக்களைத் தனியாகவும் தொடுத்தும் சூடும் பாங்கில் இதனையும் கண்ணியாகச் சூடினர். மகளிர் சூடியதாகத் தெரியவில்லை. ஆனால், மகளிர்க்கே பெயராகியது. "என் பூவைக் கினிய சொற் பூவை” என்றாள் ஒருதாய். பூவை பால்கொள் பழகு நெய்ச் சொக்கர்க்கே' என உமை பூவை எனப்பட்டாள் இன்றும் 'பூவையர்' எனப் பாவையர் அழைக்கப்படுகின்றனர். 'காயாம்பூ எனப் பெண்டிர்க்குப் பெயர் இடப்பட்டுள்ளது. 1 'து நிற வெள்ளை அடர்த்தாற் குரியளிவ் பூவைப் புதுமல ராள் சிலம்பு : 17 : 1.2 : 2. 2. கலி : 1.01 : 5, 4 ஐங் : 875. 3 திருவி. பு :கருமி :_12, 5 ம. கலம் 58