பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548


ஒரு செவிலித்தாய் பால் பெய்த வட்டக் கிண்ணத்தைக் கையில் பிடித்து மகளை உண்ண அழைப்பதைப் பார்த்த கயமனார், பால்நிறைந்த அக்கிண்ணம், '... . ... ... ... பேரிலைப் பகன்றை வான்மலர் பணி நிறைத் ததுபோல்' - காட்சி யளிப்பதாகப் பாடினார். இப்பகன்றைப் பூவின் வெண்மையாலும் பரவிப் பூக்கும் காட்சியாலும் இதனை வெண்மையான புத்தாடைக்கு உவமை கூறினர், 'போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇ'2 - என நல்லிறையனார் வடித்ததை ஒற்றி வேறு சிலரும் பாடியுள்ளனர். இம்மலர் வட்டமான வெண்மையில் திகழும் என்பதைப் பேயனார் பாடிய 'பகன்மதி உருவிற் பகன்றை மாமலர்' என்னும் அடி பளிச்சிட்டுக் காட்டுகின்றது இரவுத் திங்களில் மஞ்சள் நிறம் கலந்திருக்குமன்றோ? அதனால்தான் பகலில் தோன்றும் முழுமதியைக் காட்டி அதன் வெண்மையின் தன்மை யையும் புலப்படுத்தியுள்ளார். - இவ்வாறெல்லாம் இலக்கியத்தில் மணக்கும் பூ இயற்கை யில், நச்சினார்க்கினியர் குறிப்பது போன்று, “மணமில்லாத பகன்றைப் பூ'4 -தான். மணம் இல்லை என்றால் நறுமணம் இல்லை. அறுமணம் உண்டு. எத்தகைய அறுமணம் உண்டு.

  • ... . பகன்றைப் பொதியவிழ் வான்பூ

இன்கடுங் கள்ளின் மணமில கமழும்' - கழார்க்கீரன் எயிற் றியனார் கடுங்கள்ளின் மூக்கை அடிக்கும் அறுமணத்தைக் குறித் தார். அது நறுமண மன்று என்பதை 'மணமில கமழும்" என்று நயமாகக் குறித்தார். 1 அகம் : 219 : 3, 4, 4. கலி : 73 : 2 உரை: 2 புறம்: 393 : 17, 18, 5 குறு : 880 : . 8 ஜங் : 456 : 2. -