பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550


'தலைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலரும் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்' என ஆவூர் மூலங்கிழார் குறிக்கின்றபடி இது பனிக்காலப் பூ, காலையில் மலரும். அம்மலர்ச்சியும் மழைத்துளியின் வீச்சால் நேரும். நிறைவாக இதன் பெயர்பற்றிய கருத்து ஒன்றைக் கூற வேண்டும். பகன்றை என்னும் ஒன்றே இதன் இலக்கியப்பெயர். *சிவேதை' என்றொரு பெயரை நிகண்டுகள் குறிக்கின்றன. இதனைச் சிவதை என்றும் வழங்கினர். ஆனால், இந்நிகண்டு களே 'கிலுகிலுப்பை பகன்றை” என்று 'கிலுகிலுப்பை என்றொரு பெயரைத் தருகின்றன. குறிஞ்சிப்பாட்டில் பகன்றைக்கு உரை எழுதிய நச்சர், 'பகன்றை - பகன்றைப் பூ. இது சிவதை, பகன்றைப் பூ உற நீண்ட பாசிலைத் தாமரை" என்புழி வெள்ளிவட்டில் உவமை கோடலான் இது கிலுகிலுப்பை அன்று' - எனக் கிலுகிலுப்பைப் பெயரை மறுத்தார் சேந்தன் திவாகரம், பிங்கலம் என்னும் இரு நிகண்டுகளும் முறையே 9, 10-நூற்றாண்டின. நச்சர் 14-ஆம் நூற்றாண்டினர். எனவே, நிகண்டு தந்த பெயரையே மறுக்கின்றார் எனலாம். சிவதைப் பெயர் நிற்க, சிலம்பின் உரையாசிரியர் அடியார்க்குநல்லார் பகன்றை என்பதற்குப் 'பெருங்கையால்' என்றொரு புதுப்பெயரைக குறித்துள்ளார்.3 இது பற்றி விளக்கம் இல்லை. எனவே பகன் கறைக்குச் 'சிவதை' என்றொரு பெயரைக் கொள்ள முடிகின்றது. சிவதை என்னும் சொல்லுக்கு நாணல், தெற்குத் திசை என்னும் பொருள்களும் உள. மருத்துவ நூல்களில் வெண் சிவதை, கருஞ்சிவதை என இருவகை சொல்வர். அதற்குக் கூறப் படும் சுவை பகன்றைக்கும் ஓரளவில் ஒத்திருப்பதால் அதன் கொடியில் வெண்மைக் கலப்பும் கருமைக் கலப்பும் இருப்பதைக் கொள்ள வேண்டுமேயன்றி மலரில் இவ்விரு நறம் கொள்ளுதற்கு இல்லை. 1 அகம் : 24 : 3-5 - 8 சிலம்பு : 18 : 1.57 2 குறி. பா: 88 உரை, - --