பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

569


இம் மயிர் ஒழுங்கு போன்ற உள்ளிதழின் அமைப்பை யாழ்பத்தரைப் பொதிந்து தைத்த பச்சைக்கு - தோலுக்கு உவமை கூறிவிளக்கினார். அவ்வடிகள் இவை: - ... ... ... பாதிரி வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன் உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை (நிறமூட்டிய தோல்)" ! இவ்வாறு மயிரொழுங்காகத் தோன்றும் உள்ளிதழ்கள் இணைந்துள்ள பகுதி நல்ல மஞ்சள் நிறங்கொண்டு விளங்கும். எனவே, இம்மலர் புறவிதழால் பொன் தகடு போன்ற மஞ்சள் நிறமும், அகவிதழ்கள் புறத்தே கருஞ்செந்நீல நிறமும், அகவிதழ் களின் உள்பகுதி பட்டுபோன்றபஞ்சமைப்புடன் செந்நீல நிறமும், அகவிதழ்களின் அடிப்புறம் மஞ்சள் நிறமும் கொண்டு பன்னிறப் பாங்கில் விளங்கும். இஃதன்றி புறத்தோற்றம் வெண்மையாகவும், உட்பகுதி செம்மையாகவும் அமைந்த பாதிரி வகையும் உண்டு. நிறத்தால் வேறுபடினும், இதழின் பட்டுபோன்ற அமைப் பால் ஒரே வகையினதாகும். பட்டு போன்ற பளப்பளப்பும் பஞ்சு படர்ந்த மென்மையும் நன்னிறமும் கொண்டமையால் இஃது ஒரு வகைப் பட்டாடை போன்றதாயிற்று பட்டாடைகளில் கோசிக ஆடை என்பது ஒன்று. இதனை உவமை யாக்கித் திருத்தக்கதேவர் 'கோசிக ஆடை பூத்தன பாதிரி" 2 -என்றார். இதனுல்

  • íj, * * * இதனைக் கோசிக ஆடை மலர்' எனலாம்.

நன்கு விரிந்த இதன் மலரைத் தொடலை மாலையாக்கிமகளிர் அணிந்து மகிழ்ந்தனர். அதிரல் பூவோடு இதன் பூவையும் கூந்த லில் செருகிக் களித்தனர். கேரளத்தில் மலைஞாலப் பெண்கள் திருவாதிரைத் திரு நாளில் ஒரு தோன்பு மேற்கொள்வர். அது தம் மங்கலநாண் நீடிக்க வேண்டி மேற்கொள்வது. அதுபோது திருமணம் ஆனோர் பாதிரிப் பூவைச் சூடிக்கொள்வர். திருமணம் ஆகாதோறும் மங்கலம் பெற வேண்டிச் சூடிக்கொள்வர். - 1 பெரும்பாண் 4-.ே 2 சீ வ. சி : 1850