பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

595


விளையாடுவதற்கும், சூடிக் கொள்வதற்கும் கொய்வதை அறியலாம். எனவே இது சூடும் பூ. மழை வறண்ட காலத்திலும் இப் பூ ஓரளவில் பூக்கும், அவ்வாறு பூத்து உப்பங்கழியின் காய்ந்த சேற்றின் மேல் சிதறிக் கிடப்பதை உலோச்சனார் பாடியுள்ளார்.T இப்பூவின் பெயரால் முள்ளியார் என்றொரு புலவர் வாழ்ந்தார். அவர் எழுதிய நூல் முள்ளியார் கலித்தொகை". இன்று கிடைக்காத நூல். இவ்வாற்றான் இது நெய்தல் நிலத்தில் இளவேனிற் பருவத்தில் நிலப் பூவாக, நீலநிறத்தில் பூக்கும், வளைந்த கூரிய முள்களைக் கொண்டது என்று ஆகின்றது. 28. தார் மணி மலர், அடும்பு. 'அடப்பங்கொடி’ என வழங்கப்படும் அடும்பு நாட்டுப் புறத்தாரால் குதிரைக் குளம்புக் கொடி’ எனப்படும். இதன் இலை கவட்டிலையாக விலங்குகளின் குளம்பின் வடிவமைப்புஉடை யதாயினும் குதிரைக் குளம்பு போன்று முன்பக்கம் ஒன்று கூடிய வளைவானதன்று. மானின் குளம்பு போன்றும் ஆட்டின் குளம்பு போன்றும் உள்ளது. . - "மானடி அன்ன கவட்டிலை அடும்பு" ? - என நம்பி ‘கர்னல் அடும்பின் கவட்டிலை, மானின் குளம்பு ஏய்க்கும்" 3 - எனப் புகழேந்தியும் 'மாண்டி போன்ற இலை என்றனர். ஆட்டின் அடி போன்றஇலை' என்னும் பொருளில் ஆங்கிலத்தில் GOATS FOOT எனக் குறிக்கப்பட்டது. 'அடும்பு இவர் அணி எக்கர்' 4 - என்றபடி கடற்கரை மணல்மேட்டில் இக்கொடி படரும். கோடைக்காற்று மணலை இதன் மேல் குவிக்க இக்கொடி அக்காலத்தில் மணலுக்குள் புதைந்தும் தோன்றும். இவ்வாறு நீர்ப்பிடிப்பு இல்லாத மணல் 1 நற் : 811 : 3, 4, 3 நள, வெ : 259, 3 குறு 243 1. 4. கலி. :182 18, .