பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610


வேழம் உள்ளே கூடுள்ள நாணல் தட்டை வகை. கரும்பு கூடற்ற இனிய சாறுள்ளது. வேழத் தட்டை கரும்பின் அமைப் பில் இருப்பதால் இடைக்காலத்தார் வேழக் கரும்பு’ என்றனர், சேக்கிழாரும், 'வேழக் கரும்பினொடு மென் கரும்பு தண் வயவில்' - என வேழக்கரும்பு என்றதோடு இரண்டின் வேறுபாட்டையும் காட்டி iனார். பிற்காலத்தவர் இதனைப் பேய்க் கரும்பு’ என்றனர். எனவே, வேழம் வேறு; கரும்பு வேறு. கன்னல் என்னுஞ் சொல் சங்க காலத்தில் நாழிகை அறியும் மண் வட்டிலைக் குறித்தது. கரும்பைக் குறிக்குஞ் சொல்லாக இல்லை. திருத்தக்கதேவர் கரும்பின் சாறு" என்னும் பொருளில் முதலில் கையாண்டார். நிகண்டுகள் கரும்பிற்கு இப்பெயரையும் சேர்த்தன. பின்னரே கன்னல் என்னுஞ் சொல் கரும்பைக் குறிக்கப் பயன்பட்டது. மூங்கில் போன்று கணுக்களைப் பெற்றுள்ள தோற்றத் தால் மூங்கிலுக்குரிய கழை என்னும் சொல்லால் கரும்பைக் குறிக்கத் தொட்ங்கினர். வயலில் விளையும் மூங்கில்' என்பதாக 'பழன வெதிர் (மூங்கில்)"2 எனப்பட்டது. இக்கு’ என்னும் பெயர். சுவை கருதி எழுந்த பெயர். யாவற்றையும் நோட்ட மிட்டால் கரும்பு’ என்னும் ஒன்றே இதற்குரிய பெயராகின்றது. வயல் மூங்கில் என்ற வழக்கும், 'அகல் வயல் நீடு கழைக் கரும்பு’ (அகம் : 217 : 3, 4) "அகல்வயல் கிளைவிரி கரும்பின்" (அகம் : 235 11, 12) என்னும் அகல்வயல் குறிப்பும் இதற்கு வேண்டிய நீர்ப்பிடிப்பும் இதன் மருத நிலவாழ்வைக் காட்டுவனவாகும். புல்லினமாகை யால் இதன் பூ புதர்ப்பூவாம் நிலப்பூவாகும், 'பனிகடி கொண்ட பண்பில் வாடை'8 யால் இது மலர் வது குறிக்கப்படும். எனவே பனிப்பருவப் பூ. சிறிய அளவில் பல அரும்புகளின் தொகுப்பு குத்திட்டு நிற்கும் தோற்றத்தை, "கரும்பின் வேல்போல் வெண்முகை'4 - என வேலைப் போன்றதாகப் பாடினர். 1 பெரி. பு: ஏனாதி : 2 : 1. 3 அகம் : 285 ; 15, 2 ஐங் : 91, 4 நற் : 856 : 8. மலை .115.