பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614

یخ. ខំរុំខ្ញុំ iன்பது ஒழுங்க்மைப்பைக் குறிக்குஞ் சொல், இவ்வொழுங்கமைப்பு கருதியே திருத்தக்க தேவர் "கொடிக் கரும்பு’ என்று பாடினார். 'வேழ வெண்பூ விரிவன பலவுடன் - வெந்து வீசு கவரியின் கன்றிய" (நற் : 241 : 5, 6) 'பரியுடை நன்மான் பொங்கு உளை (கவரி) அன்ன அடைகரை வேழ வெண்பூ (ஐங் 13) 'வெழ வெண் பூ வெள் உளை' 'ஜங் 13) - என்றெல்லாம் இதன் வெண்மை நிறம் குறிக்கப்படும். இத்துடன் ஒழுங்கமைப் புடன் கொத்தாகவும்அமைந்த தோற்றத்தையும் கொண்டு வெண் கவரியாகவும், குதிரையின் தலையில் ஒப்பனைக்குச் சூட்டப்படும் துரவிக் கவரியாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றால் இது வெண் கவரி மலர்' ஆகின்றது, இப்பூங்கொத்தின் தோற்ற வெண்மையாலும் குவிந்த ஒழுங் காலும் காற்றின் அலைச்சலாலும், 'வேழ வெண் பூ விசும்பொடு குருகின் தோன்றும்' என வானத்தில் பறக்கும் குருகு போன்று தோன்றுவதாகப் பாடப்பட்டது. காற்றில் அசைந்தாடிப் பக்கத்தில் உள்ள மாமரத்தின் இளந் தளிர்களில் உராய்ந்து அவற்றை நுடங்க வைக்கும் என்று பாடியுள்ளனர். - . இஃதும் கரும்புப் பூப் போன்று மணமற்றதுதான். எனவே, சூடும் பூ அன்று. ஆயினும் பரத்தையர் தமக்கு இசைவாரை அறிய இதனைப் பயன்படுத்தினர். நள்ளிரவில் இப்பூவை விற்பது போன்று கை விற்கொண்டு திரிவர். எதிர்ப்படும் ஆடவரது கருத் தறிய இதனைக் கொடுத்துப் பார்ப்பர். அவர் ஏற்றால் தமக்கு இசைந்ததாகக் கொள்வர். இதனை ஒரம்போகியார், - "... . ... வேழ வெண்பூப் பகரும் தண்டுரை யூரன பெண்டிர் (பரத்தையர்) துஞ்சூர் யாமத்தும் துயில் அரியலரே”4 - எனப் பாடினார். இப் பர்ட்டில் வரும் பகரும் என்பதற்கு விலைகூறுதல்’ என்று பொருளாயினும், இவ்விடத்தில் இதற்குக் "கொள்வார் குறித்துக் கொடுக்கும்" என எழுதினர், இதன் கருத்து, தம்மைப் புணர்ச்சி இன்பத்திற்கு ஏற்றுக் கொள்பவரது இசைவைக் குறித்துக் | சிவ. சி : 1.184, 3 ஜங் 14, .ே ஜங் 17, 4 ஜங் : 18,