பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

621


நரந்தம் பல்காழ் கோதை சுற்றிய ஐதமை பாணி வணர் கோட்டுச் சீரியாழ்' --என்பதால் யாழிற்கும் இதன் மாலை சூட்டப்பட்டதை அறிகின்றோம். பிற்காலத்தில் இப் பூ எவ்வகையிலும் பயன்படவில்லை. காப்பியக் காலம் வரை நரந்தம் குறிப்பிடத்தக்க மலராக உள்ளது. மணமுள்ள புல்லைவிட மிகுதியாகப் பாடப்பட்டது. புல் ஒன்று இதன் பெயரில் இருப்பதால் இது புல் அல்லாத பூ. 38. பீலி ஒண்பொறி மலர். கருவிளை; செருவிளை. 'கருவிளை’ என்னும் பெயரிலேயே கருமை விளைகின்றது. கபிலர் அதற்கு மேலும் "மணிப் பூங் கருவிளை'2 -என அதன் பூவிற்கு நீல மணியின் நிறத்தை ஏற்றினார். இளவேட்டனார் என்பார் அதற்கு மேலும், 'மணிகண்டன்ன மாதிரக் கருவிளை ஒண் பூ'3 -என மணி, மாகிறம், ஒண்மை என அடுக்கினார். இவ்வாறு அடுக்கும் அளவில் இப் பூ கருநீல - நிறங்கொண்டது. மயில் தோகையில் கண் கண்ணாகப் பளபளப்பதைப் பொறி என்பர். அப்பொறியைப் போன்று இப்பூ வடிவமைப்பும் ஒளி விடும் கருநீலமும் கொண்டதால், "பீலி ஒண்பொறிக் கருவிளை"4 எனப்பட்டது. புதலாக வளர்ந்து பரவிப் பூத்திருக்கும். இதன் கொடி வாடைக்காற்றில் அசைவதை மயில் தோகை அசைந்தாடுவதாவும் பாடினார் கிள்ளி நியமங்கிழார் என்பார். நீல நிற நெய்தல் பூ மகளிர் கண்ணிற்கு உவமையாவது போன்று இக்கருவிளைப் பூவும் உவமையாகியது. மாற்றுப் பாங்கில் "கண்னெனக் கருவிளை மலர' (ஐங் : 464) கருவிளைக் கண்போல் மாமலர்' (நற் : 262 : 1) і над 302 , 4, 5, 3 நற் :221:1 2 குறி. பு : 68 4 குறுந் 110,