பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

623


வடிவத்தில் இது தோன்றுவதால் வடமொழியாளர் சங்கு புட்பம்’ என்றனர். 'காக்கொன்றை என்றொரு வழக்கும் உண்டு. புட்ப விதி நூலார், х 'கருமுகைக் கருங்காக்கொன்றை முருகாரும் வெண்காக் கொன்றை') என்றார். நிகண்டுகள் கண்ணி என்றொரு பெயரையும் கூட்டிக் காட்டியுள்ளன. வேலியில் சூடுவாரற்றுப் படரினும் இலக்கியத்தில் தனது கருநீல நிறத்தாலும் வடிவமைப்பாலும் இடம் பிடித்துக் கொண்டு குறிஞ்சி மேடையிலும் கூடியது. 39. பாம்புப் பெயர் மலர், நாகம். 'நாக நறுமரம்" - எனக் கொங்கு வேளிர் பாடியபடி இம்மரமே மனங்கொண்டது. அகில், சந்தனம் முதலிய மணந் தரும் மரங்களுடன் இந்நாகமும் சேர்த்துப் பேசப்படும். இதன் ைக மணங் கருதியும், மிகு அனல் கருதியும் இதன் விறகு நெருப்பால் "நிணச்சோறு (பிரியாணி) சமைத்தனர். குறிஞ்சிப்பாட்டில் 83ஆம் அடியில் வழை என்றொரு பூ குறிக்கப்பட்டுள்ளது. 94 ஆம் அடியில் நாகம் உள்ளது. இரண்டும் வெவ்வேறு மலர்கள். திருத்தக்க தேவரும், "நாகம் சார்ந்து வழையொடும் மரவ நிழல்' - என இரண்டையும் வெவ்வேறாகக் காட்டியுள்ளார். 'வழையே சுரபுன்னை' என்னும் பிங்கலத்தின்படி வழை என்பது சுரபுன்னையாகும். ஆனால், நச்சினார்க்கினியர் பிறழ உணர்ந்து ஒரு குழப்பம் செய்துள்ளார். நச்சர் பத்துப்பாட்டில் மூன்று பாட்டுகளிலும், கலித் தொகையிலும் சீவகசிந்தாமணியிலும் நாகம்’ என்று வரும் இடங்களில் எல்லாம் சுரபுன்னை" என்று பொருள் எழுதினார். ஆனால், அவரே, குறிஞ்சிப்பாட்டில் மட்டும் நாகம் என்பதற்கு "நாகப் பூ' என்று எழுதினார். அதே குறிஞ்சிப்பாட்டில் 1 11, off ; 3 - 3 of gu, £: 1569 3 பெருங் இலா 12 : 1.11. 4 °南;脚、2弱96