பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628


ஆய் அண்டிரன் என்பான் வழை என்னும் சுரபுன்னை மலரைத் தனது முடிப் பூவாக் கொண்டிருந்ததை, "வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்’ ! - எனப் பாடியுள்ளார். இது கொண்டு இம்மலர் சூடும் பூவாக அதிலும் மன்னனது அடை யாளப் பூவாக அமைந்திருந்ததை அறிந்து இதனை "அண்டிரன் முடிமலர்' என்கின்றோம். நாகத்துடன் தொடர்பாகப் பாடப்பட்டுள்ளமை கொண்டு இதன் பருவம் வேனிலாகலாம். புன்னைத் தொடர்பால் இதன் நிறம் வெண்மையாகவோ பொன்மையாகவோ அமைந்ததாகலாம். முடிமீதேறிய இம்மலர் தன் பெயரில் சிறப்பு ழகரத்தைப் பெற்றுத் தமிழின் மடிமீதும் தவழ்கின்றது. 42. எழினி முடி மலர். கூவிளம். 'வில்வம்’ என வழங்கப்படும் மரவகையே சங்க இலக்கியங் களில் கூவிளம்’ எனப்பட்டுள்ளது. குறிஞ்சிப் பாட்டில் வரும் 'கூவிளம்' என்பதற்கு நச்சர் 'வில்வப் பூ'2 என்றே எழுதினார். இது விளாமர இனத்தைச் சார்ந்தது. தாளி' என்னும் கொடியொன்று உண்டு. அவ்வினத்தைச் சேர்ந்ததாக அதனினும் வேறான ஒரு கொடி கூதாளி' எனப்பட்டது போன்று விளத்தின் வேறான வில்வம் கூ அடைமொழி சேர்த்துக் கூவிளம்’ எனப் பட்டது. ‘விளம்' என்பது சங்க இலக்கியங்களில் அதன் சுவையான பழம், மரம், இலைபற்றிப் பேசப்படும்; பூவைப்பற்றி எக்குறிப்பும் இல்லை. கூவிளம் மலைமல்லிகை யாகிய குளவியோடு இணைத்துப் பாடப்படுவது.

  1. 4

... ... ... ... ... குளவியொடு கூவிளத் ததைந்த கண்ணியன்’8 - எனப் பெருங்குன்றுார் கிழார் பாடலால் கூவிளப் பூ ஆடவரால் கண்ணியாகச் சூடப் பட்டதை அறியலாம். 1 புறம் : 181 : 2 3 நற் 118 8, 9 2 sf. un ; 65 -- -