பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/682

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



66. மணப்புகை மரமலர்.

அகில்.

ஆரத்தோடு பேசப்படும் இம்மலைமரம் புகைந்து மணந் தருவது. இதன் பூவும் குறிஞ்சிப்பாட்டளவே. இதனைக் காழ்வை’ என்னும் மறுபெயரால் கபிலர் குறித்துள்ளார். காழ் என்னும் வைரம் பாய்ந்த மரம் எனப்படுவதால் இப்பெயர் பெற்றது. இதன் பூ சிறியது. விசிறி வடிவினது. கொத்தாகப் பூக்கும். மஞ்சள் நிறயென்பர். குறிஞ்சி நிலத்தில் வேனிலில் பூக்கும். 67. வெள்ளிலோத்திரம். சருகு மன மலர். ஒரு பாடல்; அதனிலும் இரண்டு அடிகள்; வெள்ளிலோத் திரம் என்னும் நெடும்பெயருள்ள மலரின் வரலாற்றை வடித் துள்ளன. இவ்வொன்றுதான் சங்க இலக்கியத்தில் இதுபற்றி அறிவிக்கும் பாடல்: . "மால்வெள் ளோத்திரத்து ம்ைபில் வான்பூ . - அருஞ்சுரம் செல்வோர் சென்னிக்கு ஊட்டும்'2 -என்பது அப்பாடலின் அடிகள். இதன் ஒவ்வொரு சொல்லும் இப்பூவின் தன்மைகளைக் காட்டுகின்றது. இஃதொரு நெடிய மரம் என்பதை 'மால்" என்னும் சொல் சொல்கின்றது. எனவே இது கோட்டுப் பூ. வெள்ளோத்திரம் இதன் பெயர். பிற்காலத்தோர் வெள்ளி லோத்திரம் என்றாக்கினர். விளா மர வகையாகக் கொண்ட னர். சிலர் விளாவாகவே கொண்டனர். இது தவறு. இஃதொரு தனி மரம். - . இப்பெயரிலுள்ள "வெள்” என்பது இதன் வெண்மை நிறத்தைக் குறிக்கின்றது. மேலும் வான்’ என்பதும் இதன் வெண்மையை வழிமொழிகின்றது. அதற்கும் அடைமொழியாக அமைத்த 'மை இல்' என்பது இவ்வொன் மையின் தூய்மையைக் காட்டுகின்றது. திருத்தக்க தேவரும், 'வெள்ளிலோத்திரம் і фії, ша і 98 2 ஐங் : aoi