பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

671


எனப்பாட இதனை விளக்கிய கா. சு. பிள்ளையவர்கள் "மந்தார, மலரைத் திறப்பிக்க வல்லோசை வேண்டும் என்றெழுதினார்கள். வண்டின் இசையிலும் வல்லோசையை வேண்டும் மலர்' இது. 78. செத்த குரங்கு ೦೧f, செவ்வந்தி. செவ்வந்தி ஒரு சிறு செடி. தமிழ்நாட்டில் வந்திறங்கிய இனத்தில் இஃதொன்று. சிவந்த நிறத்தில் அந்தியில் மலர்வது கண்டு தமிழர் செவ்வந்தி எனப் பெயரிட்டுள்ளனர். சிவந்தி’ என்றும் சாமந்தி' என்றும் மருவி வழங்கப்படும். சிவப்புப் பெயர் பெறினும் இதில் வெண்மை, மஞ்சள், இளஞ் சிவப்பு நிறப்பூக்கள் உள்ளன. யாவும் ஒத்த அமைப்புடையவை. செடியியலார் இதன் ஒவ்வோரிதழையும் ஒவ்வொரு பூவாகக் கொள்வர். அவ்வகையில் இஃதொரு கொத்துப் பூ. இஃதொரு காட்டுப் பூவாகையால் தமிழ் அமைப்பிற்கு முல்லை நிலப்பூ என லாம். பல பருவங்களிலும் மலரும். - இதன் மஞ்சள் நிறப் பூவைத் தங்கச் சிவந்தி’ எனப் பொன்னாகச் சொல்வர். இதன் கிரேக்கப் பெயரும் பொன் பூ" என்னும்பொருள்தருவது. தமிழ்மன்னர்க்குஅடையாளப்பூ அமைந் தமை போன்று சப்பானிய மன்னர்க்கு இது அடையாளப் பூவாகும். இப்பெயரை வைத்து ஒரு புலவர் இருபொருள் படும்படி தங்கச் சிவந்தியா - தங்கச்சி வந்தியா’ என்றார். திருவிளையாடற் புராணத்திற்கு முந்திய இலக்கியங்களில் இதுபற்றிய செய்தியில்லை. எனவே 16, 17-ஆம் நூற்றாண் டளவில் இப்பூ இங்கு வந்திருக்கலாம். "மலர்ந்த செவ்வந்திப் போதும் • 'வகுளமும் முதிர்ந்து வாடி உலர்ந்தும்மொய்த் தளிதேன் நக்கக் கிடப்பன' -என்று நற்குலத்தவர் உயிரைக் கொடுத்தும் உதவி செய்வர் என்பதற்கு உவமையாக்கிப் பாடினார் பரஞ் சோதியார். ; : *- : t திருவினை, ча, கதம் ; 17.