பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

681


தென்னம் பாளை பிளந்த பல்வரிசை' என்றும் பாளைச் சிரிப்பு’ என்றும் இள மங்கையர்க்கு உவமையாகும். - கபிலர் குறிஞ்சிக் கோவையில் தாழை" என்னும் பெயரில் இதனைக் கோக்க, நச்சர் "தெங்கின் பாளை'ப் பூவாக விரித்தார். இவ்விடத்தால் இது சூடும் பூவாயிற்று. தெங்கு முற்கால வழக்கு. தென்னமரம் என்பதன் மரூஉ தென்னை. தென்னம் பாளைப் பூவைக் காத்தவராயன், ஐயனார் முதலிய சிறு தெய்வங்களின் சின்னமாகக் குலையுடன் படைத்து வழிபடுவர். மருத நிலத்தில் ஆண்டில் ஒவ்வொரு திங்களும் மலரும். தோற்றத்தில் வெண்மையும், வளர்ச்சி யில் மஞ்சள்பாவிய வெண்மையுங் கொண்டது. நிலப் பூ. இது அனைத்துறுப் பாலும் மக்கட்குப் பயன்படுவது. தெங்கங்காய் உணவுப் பொருள், . இப் பூ உடலின் நஞ்சு நோய்க்கு மருந்தாகும். - '-தேகத்தில் வின்னம்பா லிக்கும் விடயாகக் போகவென்றால் தென்னம்பா ளைப்பூவைத் தின்” என்றது அகத்தியர் குணபாடம். 89. சேற்று மலர், நெல், - உலக மக்களில் பகுதிப்பேர் அரிசி உணவு உண்பவர் அரிசியைத் தரும் நெல் அதன் பூவால் உருவாகின்றது. எனவே, பகுதி மக்களை வாழவைப்பது நெல்லின் பூவாகும். அதிலும் பூவில் செய்யும் ஒட்டு முறையால்தான் விளைச்சல் மிகப்பெருகி வளத்தை வளர்த்துள்ளது. நெல்லின் மூலப் பிறப்பிடம் இந்தியா என்றும் அதனிலும் தென்னகம் என்றும் அறிவித்துள்ளனர். அரிசிக்குச் செடியியலார் ஒரைசா சதையவா (CR12A SAIVA) எனப் பெயரிட்டுள்ளனர். 'ஒரைசா என்பது இலத்தின் மொழிச்சொல். 'அரிசி என்னும் தமிழ்ச் சொல்தான் ஒரைசா ஆகி இஃதே ஆங்கிலத்தில் "ரைஃச்' — இதி, பா