பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

685


இப்பூ மலைப்பாறையொன்றில் குத்தி நிற்பதைக் களிற்றின் முகத்தில் குத் தியுள்ள வேலாகப் பாடியது மலைபடுகடாம்." இது மலைபடு பயிர்களில் ஒன்று. 'மால்வரை (மலை) ஒழுகிய வாழை" என்றதன்படி இது குறிஞ்சி நில மலர். கிளைவிடாதது என்ற வகையில் புதர்ப் பூவாம் நிலப் பூ. ஆண்டெல்லாம் பூக்குமாயினும் இதற்குரிய பருவம் இளவேனில், நிறம் இள் மஞ்சள். தேனை ஓரளவில் அதிகமாகக் கொண்டது. இப் பூ பயனில் உணவுப் பூ, பண்பில் உவமைப் பூ. குடும் பூ அன்று. ஆயினும் கபிலரால் குறிஞ்சிக் கோப்பில் கோக்கப்பட்டுள்ளது. •. அனைத்து உறுப்புகளாலும் பயன்படும் வாழையின் பூவும் மருத்துவப் பயன் உள்ளது. வயிற்றளைவு, கைகால் எரிச்சல், எருவாய்க் கடுப்பு, இருமல் முதலியவற்றிற்கு அரிய மருந்து. தொக்குறு பூ மேகம் (மேகநோய்) ஒழிக்கும்" என்றது அகத்தியர் குணபாடம். மருந்துப் பூ, உணவுப் பூ வாயினும் ஊட்டப் பூ அன்று. இதனால் உருவாகும் காய் கனிகளில் உள்ள ஊட்டமன்களில் (WITAMIN A. B. C.) எவ்வொன்றும் இப்பூவில் இல்லை. 92. ದಿಗಿಲ್ರಕತ್ರ ೧೧)ಗೆ, அவரை. அவரை என்றதும் சமையலுக்குரிய அவரைக் காய்தான் நினைவில் வரும். தற்காலத்தில் அதன் பூ பற்றிக் கவனங்கொள் வதில்லை. குறிஞ்சிப்பாட்டு தன் பட்டியலில், 'அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை' என அவரைப் பூவைத் தொகுத்துள்ளது. பெரும்புனக் குறவன் சிறு தினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும் அரும்பனி அற்சிரம்' ! - . . . - என்னும் கடுவன் மள்ளன் பாடல் அவரைப் பூவின் இலக்கிய வரலாற்று வடிப்பு. குறிஞ்சி 1 மலை :129, 181 . A குறி. பா 81. . 2 சிறுபான் :2 : 4 குறு 82 : 4 .ே