பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688


போன்று இருவகைப் பூக்களும் மருந்துக்குப் பயன் படுபவை, அகத்திப் (வெண்மை) பூ புகைபிடிப்பதால் எழும் பித்தத்தையும், பித்தத் தொடர்பான வெப்பத்தையும் போக்கவல்லது. இதனை அகத்தியர் குணபாடம், . 'புகைப்பித்த மும் அழலால் யூரிக்கும் அந்த வகைப்பித்த மும் அனலும் மாறும் ... . அகத்தி மலருக் கறி" - என்கின்றது. செவ்வகத்தியால், மூக்கில் வழியும் குருதிப்போக்கு நிற்கும். உள்வெப்பம் தணியும். 'அகத்தி’ என்னுஞ்சொல்லில் ஒரு கருத்து பொதிந்துள்ளது. இக்காலத்தில் 'அவசியம்’ என்று பேசப்படும் வடசொற்கருத்து அக்காலத்தில் 'அகத்தியம்’ எனப்பட்டது. அகத்தியத்தில் அகத்தி' உள்ளது. 94. வடுகர் கண்ணி மலர், குல்லை. குல்லை ஒரு சிறு செடி. உரையாளர் கஞ்சங்குல்லை' என்பர். தற்காலத்தில் கஞ்சாங் கோரை எனப்படும். இது துளசி இனம். பிங்கலம் புனத் துளசி என்னும். மருத்துவ நூலார் நாய்த் துளசி என்பர். துளசியின் ஒரு பெயராகக் 'குல்லை குறிக்கப்படும். வெட்சி, கஞ்சாச்செடி இவற்றிற்கும் இப்பெயர் குறிக்கப்படினும் அப்படி அவற்றிற்கொரு பெயர் என்ப தன்றி குல்லை அவையல்ல. குல்லை தனிச்செடி. துளசிக்கும் குல்லைக்கும் ஆங்கிலத்தில் பேசில் (BASI) என்றே பெயர். இரண்டன் செடியியற் பெயரும் ஒசிமம் (OCIMUM) எனப்படும். ஆனால், துளசி இலைமணத்தாற் சிறப்புற்றது. குல்லையின் இலைக்கொத்தும் மகளிர் தழையுடைக்குப் பயன் பட்டுள்ளது. நெல் முதலியவற்றில் அந்து முதலிய பூச்சிபிடிக் காமலிருக்க மணவீச்சுள்ள இதன் இலைக்கொத்து பயன்படு கின்றது. இருப்பினும் பத்துப் பாட்டில் ஈரிடங்களிலும் கலித் தொகையில் ஒரிடத்திலும் நச்சர் "கஞ்சங் குல்லைப் பூ' என இதன் பூவைக் குறித்துள்ளார். זל