பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அரிய மலர்கள்

அரிய நிலையிலும் அறியும் நிலை.

நினைப்பதற்கு அரிது; சொல்வதற்கு அரிது; செய்வதற்கு அரிது என்றும், உணர்வதற்கு அரிது; அறிவதற்கு அரிது என்றும், கேட்பதற்கு அரிது; காண்பதற்கு அரிது என்றும் அரிய நிலை பலவகைப்படும். இங்கு மலர்களின் தொடர் பில் காண்பதற்கு அரிதும், அறிவதற்கு அரிதும் கொள்ளப் படுகின்றன. - காண்பதற்கு அரிது என்பதில் ஒருவகை: ஒரு பொருள் இருந்தது. பின் அழிந்து இல்லாமற்போனால் காட்சிக்கு அரிதாவது. வேறு ஒரு வகை: ஒரு பொருள் அழியாமல் இருந்து அதனை அடையாளங்கண்டு கொள்ள முடியாமையால் அப் பொருளாகக் காட்சிக்கு அரிதாவது, இவ்விரு வகைக்கும் ஆட்பட்டதாகக் கொள்ள அனிச்ச் மலர் முன்னிற்கிறது. பொருள் உண்மையாகவே இருக்கிறது. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் குடத்துப் பொருளாகப் பொதிந் திருக்கிறது. இதனையும் காண்பதற்கு அரிது எனலாம். இவ் வரியனவாக அத்தி மலரும், ஆல மலரும் உள்ளன. * , பொருள் உண்மையாகவே இருக்கிறது. பொதிந்து மறைந் தில்லாமல் திறப்பாகவே உள்ளது. ஆன்ால், தான் காட்சிப்பட iேண்டிய அளவில் வடிவப்பாட்டைக் கொள்ளாமல் நுண்மை