பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

707


வகையா? இவ்வாறு ஐயம் எழுதலால் சுள்ளி அறிவதற்கு அரிய மலராகின்றது. சுள்ளி, அனிச்சம் அன்று என்பது முன்னே காணப் பட்டது. நறவம் கொடி, பின்னே காணப்படும் விளக்கத்தால் சுள்ளி மரம். எனவே பொருந்தாது. ஞாழல் நெய்தல் நிலத்தது சுள்ளி குறிஞ்சி நிலத்ததாகக் அறியப்படும். ஞாழல் சுள்ளி யாகாது. கள்ளியையும் மராஅத்தையும் நச்சர் குழப்பிய தவறு முன்னே (இந்நூற் பக்கம் 511, 5.12.) பதியப்பட்டுள்ளது. எனவே, மராஅமும் சுள்ளி அன்று. ஆச்சா என்னுஞ் சொல் சங்ககாலத்தில் ஆட்சியில் இல்லை. இதன் பொருத்தத்தைப் பின்னே காணலாம். இவ்வாறு ஒவ்வொன்றும் சுள் ளிக் கு வேறாகும்போது நிகண்டுகள் பலவற்றிற்கும் சுள்ளியைக் குறிக்கக் கரணியம் என்ன? சுள்ளி என்னுஞ் சொல் பலபொருள் ஒருசொல். இலக்கியங் களில் இச்சொல் ஆட்சிபெற்றுள்ள இடங்கொண்டு இச்சொற்கு மென்மை, கூர்மை, ஈரம் அற்றுக் காய்ந்தது என்னும் பொருள் களைக் காண்கின்றோம். மொழியளவில் சுள்' என்னும் அடியாகச் 'சூட்டை உடையது' என்றும், சுள் என்னும் கார்ப்புச் சுவை கொண்டது என்றும் பொருள்தரும். இப்பொருள்களில் முன்னே காணப்பட்ட நறவம் முதலியவற்றிற்கு உள்ள தன்மை பொருந்தி இருத்தலைவைத்துச் சுள்ளி' என்னும் பெயர் சூட்டப்பட்டிருக் கலாம். -: இயற்கைக் கவிஞர் கபிலர் மேலே காணப்பட்டவற்றில் ஆச்சா தவிர மற்றவற்றைத் தனித்தனியே காட்டிச் சுள்ளியை யும் தனி ஒன்றாகக் காட்டியுள்ளார். செடியியலார் நறவம் முதலியவற்றிற்குத் தனித்தனியே வெவ்வேறு பெயரமைத்துச் சுள்ளிக்குத் தனியாக, தியோசுபைரோசு எபீனம் (DIOSPYROS EBENUM) எனப் பெயரிட்டுளர். இவற்றால் கள்ளி தனியொரு வகையாகின்றது. இத்தனிவகைச் சுள்ளியின் விவரம் காணத் தக்கது. முதல் இராசேந்திரன் மெய்ச்சீர்த்தியில், "சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும்" என்றுள்ளது. கொள்ளிப் பாக்கையின் கோட்டையைச் சுற்றிச் சுள்ளி இருந்தமை தெரிகின்றது. இவ்வாறு பெருமரங்களே அ மையும். சாலம்' TలెF 8. 2 తbaఖ శతaఎcG మf ?