பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

727

பரத்தை விட்டிலிருந்து மீளும் தலைவன் மணமிக்க் குவளைப் பூ மாலை சூடி வந்தான். தெருவில் எருக்கம் பூ வைத்து விளையாடிய குழந்தையும் உள்ளே வந்தது. இல்லத்தலைவி மணமிக்க குவளை மணத்தைப் பரத்தை தழுவியதால் ஏற்காமல் மகன்தலையில்சூடியிருந்த எருக்கு மணமுடையது என்று அவனைத் தழுவினாள். இதனை, 'ஒல்லேம் குவளை புலா அல்; மருங்கின் - புல்லெருக்கங் கண்ணி நறிது -என்றாள் தல்ைவி. மணமற்ற எருக்கை நறிது என்றது. குற்றமாகாது என்பதை விளக்கும் உரையாசிரியர் செந்நாவரையர், 'எருக்கங் கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துணிகூர் வெப்பம், முகிழ்நகை (குழந்தை) முகத்தால் தணிக்கும் புதல்வன் மேல் ஒருகாலைக் கொருகால் ' பெருகும் அன்பு காரணம்' -என்றார். இவ்வகையில் எருக்கு ஒரு பாட்டையும் பெற்று அதற்கொரு விளக்கமும் பெற்றது. பெற்றாலும் மணம் பெற்றதாகாது. . . . . மணமற்றதாயினும் இதன் எழிலான தோற்றம் கருதிப் பூ கிடைக்காத இடங்களில் சூடுவர். பாலைநில வழியில் கூத்தர். - 'குவியினர் எருக்கின் ததர்பூங் கண்ணி . . . . . ஆடு உச் சென்னி தகைப்ப" 2 ஆடியதை அதியன் விண்ணத்தனார் என்பார் பாடிக்காட்டியுள்ளார். இது இயற்கை யாகச் சூடப்பட்டது. செயற்கையாகவும் சூடப்படும். தன்ன்ால் காதலிக்கப்பட்ட பெண் தன்னை மணப்பதற்குத் தடையோ மறுப்போ நேர்ந்தால் காதலன் மடலேறுவ்ான். இதற்குரிய ஒப்பனைகளில் - செயற்கையாகப் புனையும் கோலத்தில் ஒன்றாக எருக்கம் பூங்கொத்தைக் கண்ணியாகச் சூடுவான். . 'மாவென மடலும் ஊர்ப; பூ எனக் - குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் துடுப”8 -எனப் பேரெயின் முறுவலார் பாடியுள்ளமை போன்று பல அகத் துறை: பாடல்களும் பாடப்பட்டுள்ளன. தனியாகச் சூடப்பட்டது மட்டுமன்றி, ‘. - ' . . . அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்தியாத்து” -என்றபடி பிற பூக்களுடனும் அணியப்பட்டது. மடலேறுதல் 1 தொல், சொல் : 56 செந்நாவரைய! உரைக்காட்டு. - .12 مليلي : 801 : قا» وي . 2 3 குறுந் 17 11:2 4 ఊ::1881,