பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

9



பீடும் பெருமையும்


உலகின் பெருமைக்கு உயிரினங்களே சான்றாகும். ஒப்பற்ற உயிரினங்களின் வகைகளோ கோடிக்கு மேலாகும்.


எத்தனை கோடி இருந்தாலும், இருக்கின்ற உயிரினங் களில் எழிலான அழகு படைத்தது மனித உயிர்கள் தான்.


வடிவத்தில், அமைப்பில், வளர்ந்து வரும் வனப்பில், செழிப்பில், நிமிர்ந்து நிற்கும் திளைப்பில் நேர்த்தியில் மனித உடலே மாபெரும் அழகுக் களஞ்சியமாக விளங்குகிறது. துலங்குகிறது.


நிலத்தில் ஊர்வன, நீரில் நீந்துவன, வானில் பறப்பன என்று வகை பிரித்துக் காட்டினாலும், நிலத்தில் நீரில் நெடுவானில் வாழ்கின்ற நிறைய உயிரினங்களில், மனிதனே தலையாய மேன்மை பெற்றுக் கொண்டிருக்கிறான்.


நமக்குத் தெரியும் - மிருகங்கள் எல்லாம் குனிந்து தான் நிற்கின்றன - நடக்கின்றன. அப்படித்தான் நடக்கும். மிருகங்களுக்கே முதுகில் வளைவு என்றால், ஊர்ந்து போகும் பிராணிகளின் நிலைமை என்ன? பறந்து திரியும் பட்சிகளின் நிலைமை என்ன?


அவைகள் குனிந்து நிற்பவை. கூன் அமைப்பு. கொண்டவை. கோணல் உடல் கொண்டவை. வளைந்தேஇருப்பவை.