பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

115


 விருந்து படைக்கிற உணவு. இசை, நாட்டியம், பேச்சு எல்லாம் உடலை பயன்படுத்திக் கொள்கின்றன. மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டுகின்றன. ஆனால் உடலின் சக்தியை, சாமர்த்தியமாக செலவு பண்ணச் செய்து விடுகின்றன.


ஆனால் விளையாட்டு அப்படி அல்ல.


உடலின் சக்தியை செலவழிப்பது போல காட்சி தந்து, உடலின் சக்தியை பன்மடங்கு பெருக்கி விடுவது ஒன்று.


உடலின் உறுப்புக்களை ஒருங்கிணைத்து ஒரு முகமாகச் செயல்பட வைக்கும் உயர்ந்த உன்னத ஊக்கியாக விளங்குவது ஒன்று.


உடலில் ஒளிந்து கிடக்கும் மறைந்து கிடக்கும். முளைத்துக் கொண்டிருக்கும் திறமைகளைக் கண்டு பிடித்து, வெளிக் கொணர்ந்து விடுகிற விந்தையைப் படைப்பது ஒன்று.


உடலின் திறன்களில் மேலும் நுண் திறன்கள், நுண்மாண் நுழைபுலச் சக்திகளை வளர்த்து மேம்படச் செய்வது ஒன்று.


இப்படி விளையாட்டில் பங்கு பெறும் போதும், பயிற்சி செய்யும் போதும், போட்டியிடும் போதும் புதுப்புது மனிதர்களை அறிமுகப்படுத்தி, புதுப் புது ஞானங்களை அள்ளித் தருகிற புதுமையால் தான், விளையாட்டை விருந்து என்று இங்கு வியந்து கூறுகிறோம்.


விளையாட்டில் திறமைகள் நிறைய இருக்கின்றன.

விளையாட்டுக்குள்ளே உள்ள விதவிதமான நுணுக்கங்களை புரிந்து கொள்ள அறிவும், திறச் செறிவும் வேண்டும்.


அறிவு வளம் குறைந்தவர்கள், அறிவிலிகள், தற்குறிகள் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால் அதில்