பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மற்றவர்கள் போற்றுகிற அளவுக்கு முன்னேற்றம் பெற முடியாது. முன்னுக்கும் வர முடியாது.


அறிவை அனுபவ மூலமாக வளர்க்கின்ற புதுமை, திறமையை பயிற்சிகள் மூலமாக பெருக்குகிற புதுமை, துணுக்கங்களை நூதனமாகத் தெரிவிக்கின்ற புதுமை, எதிர்ப்படுகின்ற இக்கட்டுகளிலிருந்து எப்படி வெற்றிகரமாக வெளிப்படுவது என்ற வித்தையை தினம் தினம் புதுப்புது சந்தர்ப்பங்களை உண்டு பண்ணி, படிப்பிக்கின்ற புதுமை விளையாட்டில் உண்டு.


உணவு, இசை, நாட்டியம் எல்லாம் உணர்வுகளைத் தான் மகிழ்விக்கின்றன.


ஆனால் விளையாட்டோ உணர்வுகளை மகிழ்விப்ப துடன், உடலையும் மகிழ்விக்கிறது.


உடல் தினவுகளுக்கு உண்மையான உவப்பான விருந்தாக விளையாட்டுக்கள் எப்போதும் விளங்குகின்றன.


மனதின் மயக்கங்களுக்கு, கவலைகளுக்கு, குழப்பங் களுக்கு, உற்சாகமூட்டும் விருந்தாக விளையாட்டுக்கள் பயன்படுகின்றன.


அதனால் தான் விருந்துகளில் தலையாயது, கனி போன்றது, பொன்போன்றது, புகழ் கொண்டது விளை யாட்டுக்களே என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.


விளையாட்டு விருந்திலே கலந்து கொண்டவர்கள் வீரர்கள் போல, செம்மாந்த தோற்றம், சிறப்பான உடல் அமைப்பு, துள்ளும் நடை, தொய்வு வராத திறமை. வலிமை கொண்டவர்களாகவே என்றும் திகழ்கிறார்கள்.


விருந்தில் கலந்து கொண்டு ருசித்தவர்களுக்கு அந்த அருமை பெருமை தெரியும். உங்களையும் விருந்துண்ண, விளையாடி மகிழ அழைக்கிறேன்.