பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

121



கண்டதற்கெல்லாம் ஜொள் ஊற்றினால்
எச்சக்கலை ஆகிவிடமாட்டோமா!
நா அடக்கம் இருந்தால் இந்த
நாடே நமக்கு அடக்கம்
குழந்தை பிறந்ததும் கோவென்று கத்துகிறது
பாழும் உலகில் வந்து பிறந்ததற்காக ம்ஹூம்
சுயலாபத்திற்கு தனது சுவாசத்திற்கு
தனது சுகவாசத்திற்கு
வசமாக மூக்கைப் பயன்படுத்திக் கொள்கிறது
வாசம் பிடிக்கும் வழக்கம் மூக்கருக்கு உண்டு
மனிதர்களுக்கு மூக்கில்
5 மில்லியன் செல்கள் தான் முகந்து பார்க்க
அத்தனையும் மோந்து மோப்பம் பிடிக்கும்
அல்சேஷன் நாய்க்கு மட்டும் 220 மில்லியன் செல்கள்.
நல்லவேளை நமக்கு அவ்வளவு இல்லை
இருந்துவிட்டால், ஆண்களும் பெண்களும்
இருட்டில் இருந்தாலும்
விரட்டிப் பிடித்துக் கொள்வார்கள்.
ஆண்டவன் அறிந்துதான் என்னவோ
அளவோடு படைத்து
அடக்கி வாசித்து விட்டான்.
நாம் போடுகிற தும்மலுக்கு
வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர்.
எஞ்சின்களுக்கும் இல்லாத வேகம் நமக்குண்டு
காதற்ற ஊசி என்று பேசுவார்கள்.