பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

31



4. இடையன் எறிந்த மரம்


என்றும் எப்பொழுதும், உலகம் இளமையாகத் தோன்றுவதற்குக் காரணம் - அதற்குரிய இயக்கம் தான் என்பார்கள் பேரறிஞர்கள்.

உலகம் இளமையாக இருக்கிறது. இனிமையாகச் சுவைக்கிறது. புதுமையாகச் சிரிக்கிறது. வளமையாக கொழிக்கிறது.

அவற்றிற்கு காரணம், உலகைச் சூழ்ந்திருக்கின்ற பஞ்ச பூதங்களே அவற்றின் அழகான, ஆழமான இயக்கங்களே!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற பூதங்கள் எல்லாமே நிரந்தரமான இயக்கத்தில், நீடித்த உழைப்பில் இருப்பதால் தான், பணிகளில் செழுமையும், பார்வைக்குள் முழுமையும் கொண்டவையாக விளங்குகின்றன.

பசுமையும் கவர்ச்சியும்

உலகத்தின் கவர்ச்சிக்கு, எங்கும் நிறைந்திருக்கிற இயற்கையின் பசுமையே சாட்சியாகும். அதுவே கவர்ச்சியின் ஆட்சியாகும்.

பசுமைக்கு புல்தரைகள் மட்டும் விளை நிலங்களாக விளங்காமல் மரங்களும் செடிகளும், கொடிகளும், கூட கூடுதல் தோற்றத்தைக் கொடுக்கின்றன.

மரங்களில் இரண்டு வகை உண்டு.

தாமே உண்டாகி, வளர்ந்து கொண்டு நிற்பவை ஒன்று.