பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 உணர்ச்சியும் எழுச்சியும் வளர்ச்சியும் நிறைந்த மரங்களைப் போலவே, உடலும் அமைந்திருக்கிறது. உடலின் மேன்மை கருதி, உடலை வளர்க்க வேண்டியது, உயர்ந்த மக்களின் கடமையாகவே ஆகிறது.

ஆனால் உடலைப் பார்ப்பவர் யார்? பராமரிப்பவர் யார்? பாதுகாப்பவர் யார்? பண்போடு பரிவர்த்தனை நடத்துபவர் யார்?

தானே திறமையாக வளர்ந்து கொள்கிற தேகம், தனக்குத் தேவையானவற்றை தானே தேர்ந்தெடுத்து, வளர்த்துக் கொள்கிற தேகம். தனக்கு வேண்டாமென்றால் தானே தனது வளர்ச்சியைத் தடுத்துக் கொள்கிற நிறுத்திக் கொள்கிற தேகம்.

தேகத்தின் இந்த சிறப்பான தன்மையை, அடிப்படை உண்மையை, அறிவாகப் புரிந்து கொள்ளாமல், தேகத்தை ஏதோ அடிமைபோல நினைத்து, அல்லும் பகலும் வேலைவாங்குகிற ஆள் விரட்டி எஜமானர்களாகவே, எல்லோரும் செயல்படுகின்றார்கள்.

அழிக்கப்படுகிற மரம்

வளர்க்கப்படவேண்டிய மரத்தை வளர்க்காவிட்டாலும், அது அவ்வப்போது அளிக்கின்ற பயன்களையெல்லாம், கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.

வளர்க்கும் முயற்சியைக் மேற்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாக தினந்தினம் வெட்டிக் கழிக்கும் வேலையில் ஈடுபட்ட இடையர்களைப் போல, தங்கள் தேகத்தைக் காக்காமல், தினம் தினம் தேகத்தின் சக்தியை அழித்துக் கொண்டே இருக்கும் மடையர்கள் தாம், மண்ணுலகில் மலிந்து கிடக்கின்றார்கள்.