பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாக்கும் போக்கும்

கூடி வாழும் மிருகம் என்று மனிதர்களைப் பற்றிக் கூறுவார்கள்.

பேசுகிற இந்த அறிவுள்ள மிருகத்திற்கு பேசமட்டுமா தெரிகிறது?

ஏராளமாக ஏசவும் தெரிகிறது. தாராளமாகவும் புரிகிறது.

பேசுவதைவிட ஏசுவதில் தான் இந்த மனிதர்களுக்கு எப்பொழுதும் இன்பமாக இருக்கிறது. இதுவே சொர்க்கமாகவும் தெரிகிறது.

நல்லது கெட்டதைப் புரிந்து கொண்டாலும், ஆட்களுக்கு ஏற்ப நிலை மாறிப் பேசுவதுதான், மனிதப்பண்பாடாக விளங்குகிறது.

இந்தப் பண்பாடற்ற காரியங்களுக்கு, பிரச்சினைகளுக்குப் பெரிதும் காரணமாக இருப்பது, நாக்கு தான் என்பதை எல்லோரும் அறிவோம்.

நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும் என்பார்கள்.

அந்த நாக்கைப்பற்றி சாதாரண மனிதர்களிலிருந்து, சான்றோர்கள் வரை, வேண்டிய அளவு விளக்கம் கொடுத்திருக்கின்றனர், முயன்ற அளவு எச்சரித்தும் இருக்கின்றனர்.