பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 ஒரு நிலை இருப்பதைத் தான், மக்கள் மறந்து விடுகின்றார்கள்.


அதற்கும் காரணம் இருக்கத்தான் இருக்கிறது.


நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஆண் பெண் நெஞ்சங்களில் நீங்காத நினைவாக, அணையாத நெருப்பாக, வீசாத புயலாக வீற்றிப்பது காதல் நினைவுகள்தான்.


உயிரை விரும்புவது காதல், உடலை விரும்புவது காமம் என்பார்கள் அறிஞர்கள். நமது மக்கள் மனதிலே நீறு பூத்த நெருப்பாக, வீறு கொண்ட சக்தியாக விளங்கி நிற்பது எது?காதலா? காமமா?


சமுதாயச் சந்தையிலே அதிகம் விற்பனையாவது இந்தக் கருத்துதான். சமுதாயச் சண்டையிலே அதிகமாக மண்டை உடைபடுவதும் இந்த விஷயத்தில் தான்.


குடும்பம், கல்யாணம், குழந்தைகள், அவர்களை வளர்க்க கஷ்டம், அதைத் தொடர்ந்து கஷ்டம். இப்படித்தான் கஷடங்களிலிலேயே நாட்கள் ஓடுகின்றன.


குழந்தை - இளமை - முதுமை - பிணி - நோக்காடு - சாக்காடு - இந்த கால கதியில் தான் மனிதவாழ்க்கை தோன்றி மறைந்து போகிறது, உறைந்து போகிறது.


இளமையில் தொடங்கி, இறக்கும் வரை இந்த ஏடா கூடமான உடல் உறவுதான் எல்லோரின் வாழ்க்கையிலும் இனிய கீதமாக இருக்கிறது. ஈருயிரும் ஒருயிர் ஆகலாம் என்ற வசனம் உங்கள் காதில் விழுந்திருக்குமே!


காதலில் கலந்து, கரைந்து, உலர்ந்து காற்றாகிப் போகின்ற காதலர்கள் பேசிக் கொள்கிற பேச்சும், எழுதிக் கொள்கிற கடிதமும் இந்த வார்த்தைகளில்தான் வட்டமிட்டுக்