பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காணுகிறோம். ஆராய்ச்சிப்போக்கில் எழுதப் பெற்றாலும் படிக்கப் படிக்க மொழி, இலக்கியம், இலக்கணம், மரபு, கலைகள், மேற்கோள் காட்டும் விதம், பண்டைய அரசியல் வாழ்க்கை நெறி யாவற்றையும் தெளிவாக அறியும் வண்ணம் நம்மைத் தெள்ளியர் ஆக்குகின்றார். நற்றிணை, குறுந்தொகை, இறையனர் களவியல் உரை தொடங்கி, பாரதியார், பாரதிதாசன் வரை தமிழ்க் கவி வெள்ளமும் தமிழ்க் கருத்தோட்டமும் எத்தனை மாண்புள்ளது என்பதனை நமக்கு நயம்பட உரைக்கின்றார்.

தமிழ்க் கவிஞர்கள், உரையாசிரியர்கள், சமயவாதிகள் தமிழ் மொழிக்குச் செய்த அளப்பரிய தொண்டு போன்று செந்தமிழ்க் கட்டுரை வடிவத்திற்கும் வளர்ச்சிக்கும் தமிழ் மொழி ஆக்க வழிக்கும் வடிவத்திற்கும் அரிய தொண்டினைச் செய்துள்ளார். புலவர்களும், புதுமைப் பிரியர்களும் விரும்பிப் படிக்கக் கூடிய அணிகள் பல இவற்றுள் இடம் பெற்றிருக்கின்றன.

-டி.என்.சுகி.சுப்பிரமணியன்