99
99
“ திண்டேர்ப் பொறையன்
தொண்டி யன்னவெம் ஒண்டொடி..” 14
இவ்வாறு வளம் பல பெற்றுப் பெரு வாழ்வுடன் துலங்கிய தொண்டியினை ஒரு காலத்தில் ஆண்ட கணக் கால் இரும்பொறை, மூவன் என்னும் சிற்றரசனே வென்று அவனுடைய பற்களைப் பிடுங்கித் தன் தொண்டியம்பதிக் கோட்டைக் கதவில் பதித்து மகிழ்ந்தான் என்னும் தமிழர் தம் வீர வாழ்விற் கியைந்திருந்த அங்காளைய செய்தியினை ாற்றிணைப் பாடலொன்று நவிலுகின்றது.
“ மூவன்............
முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்
கானலங் தொண்டிப் பொருங்ண் வென்வேல்
தெறலருந் தானைப் பொறையன்.” 25
இவ்வாறு வளம் சிறந்து நலங்கெழுமிப் பெருவாழ்வு பெற்றிருந்த தொண்டி கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் தாழ்நிலை யடைந்தது. சேரரின தொண்டியின் புகழை யொட்டியே பாண்டியர் தம் காட்டிலும் ஒரு தொண்டியை அமைத்துக் கொண்டனர் எனலாம்.
சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் வரும் “ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோர்’ என்ற தொடருக்கு, கீழ்த்திசையிலே தொண்டி என்னும் பகுதியில் உள்ள அரசர் என்றும், தொண்டியோர்சோழ குலத்தோர் என்றும் அடியார்க்கு நல்லார்
24. அகநானூறு: 61:7-8 25. நற்றிணை: 18:2-5