பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100

எழுதியுள்ள உரை கொண்டு சோழருக்கு உரித்தாகக் கீழைக் கடற்கரையில் ஒரு தொண்டிருந்ததென ஊகிக்க லாம். ஆயினும் இத் தொண்டி சுமித்ரா, ஜாவா முதலிய பிரதேசங்களில் சோழ குலத்தோரால் அமைக்கப்பட்ட ஒரு நகரமாதல் வேண்டும் என்பர் பேராசிரியர் வையாபுரிப் * Qarāmr. **

ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பாண்டியர் தொண்டியினை நந்திக் கலம்பகம் கொண்ட நாயகன் மூன்றாம் நந்திவர்மன் பொருது கைப்பற்றினன் என நந்திக் கலம்பகம் 38 ஆம் செய்யுள் உணர்த்தும்.

கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இரண்டாம் இராசாதிராசன் ஈழப் படையால் தோற்கடிக்கப்பட்ட குலசேகர பாண்டியனுக்குத் துணையாகப் படை கடத்தித். தொண்டியில் கடும் போர் செய்து ஈழப் படைகளைப் பின்வாங்கச் செய்து பாண்டியர் ஆட்சியை மீட்டும் கிலேகாட்டினன் என ஆர்ப்பாக்கம் கல்வெட்டு அறிவிக் கின்றது.

முடியுடை மூவேந்தர்க்கும் தொண்டி என்ற பெயரில் இருந்த மயக்கமும், பிற காட்டினரும் ஈராயிரம் ஆண்டு. களுக்கு முன்னரே தொண்டியைத் தம் நூலில் புகழ் படக் குறிப்பிட்டுள்ளனர் என்ற செய்தியும், தொண்டி, நெல்லுக்கும் மீன் வளத்திற்கும் சிறந்திருந்தது என்கின்ற, உண்மையும் மேற்குறிப்பிடப் பெற்ற பழம் பாடல்கள் வழி: நன்கு புலகைக் காணலாம்.

26. இலக்கிய தீபம் : பக்கம்: 174