பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

7

காதல் உணர்த்திய பண்பாடு

பெண்ணின் பெரு ைமயைப் போற்றிப் பாடல்கள் பாடிய கவிஞர்கள் பலர். பெண்ணின் பெரு நலத்தினையும் மாண்பினையும் சங்கக் கவிஞர்கள் சிறப்புறப் பாடியுள்ள னர். பழந்தமிழ் மகளிர் அழகாலும் பண்பாலும் மாட்சி யுற்றிருந்தனர். பெண்ணின் பெரும் பண்புச் சிறப்புக் காரணமாகவே இல்வாழ்க்கையின் இனிமை அமைந்து கிடக்கின்றது. மனேக்கு விளக்கம் மடவார் என்றும், *மனேக்குவிளக் காகிய வாணுதல்’ என்றும் பெண்ணின் பெருமை கிளத்தப்படுகின்றது.

  • யூவொடு புரையுங் கண்ணும் வேயென

விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறுஉ நுதலும் ‘ கொண்டு பெருவனப்புடன் பெண்மை கலம் விளங்கு வதாக மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் என்னும் சங்ககாலக் கவிஞர் சாற்றுகின்றார்.

தொல்காப்பியர்ை. ‘ அச்சமும் காணும் மடனும்முந் துறுதல்

கிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப ‘'’ என்று பெண்ணின் பெரும் பண்புகளைச் சுட்டுகின்றார். மேலும் அவர்,

1. குறுந்தொகை : 266 : 1-3 2. தொல்காப்பியம் : களவியல்: 8