பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103

‘ அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றங்ங காதலர் “

என்று பொருட்பொருத்தமுறப் புலப்படுத்துகின்றது. அகநானூற்றுப் பாடலொன்று தலைவன்,

- கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவும்

கேளல் கேளிர் கெழியின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஆக்கமொடு ‘ பொருள்வயிற் பிரிந்ததாக மொழியும்.

இந்த கிலேயில் பொருள் தேடத் தன் கெஞ்சை வலிக் கின்றான் தலைவன். வினையே ஆடவர்க் குயிரன்றாே? தலைவியை விடுத்துத் தனியே பாலே வழியைக் கடந்து செல்லும் தலைவனைப் பாலையின் கொடிய வெப்பம் துன்புறுத்துகின்றது. சிறுபானற்றுப்படையில் வரும்,

-- “ வேனில் கின்ற வெம்பத வழிநாள்

காலைஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்பப் பாலை கின்ற பாலை “

|என்ற வரிகளுக்குப் பொருள் எழுதும்பொழுது உரை யாசிரியர் நச்சினர்க்கினியர், இளவேனில் விலைபெற்ற காலத்திற்கும் பின்னகிய நாளிலே ஞாயிற்றினுடைய ‘கதிர் வெம்மையைச் செலுத்துதலைச் செய்கையினலே வெய்ய செவ்வியையுடைய பாலேததன்மை கிலேபெற்ற மையாற் பிறந்த பாலை நிலமாகிய தொலையாத வழியினே

யுடைய சுரனென்க’ என்று உரை கண்டுள்ளார். மேலும், அவர் பாலைத் தன்மையினைத் தொல்காப்பியப்

5. கலித்தொகை: 11: 1.4 6. அகதானுாறு; 93:1-3 7. சிறுபாணுற்றிப்பலட.9-11