பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106

கின்றாள். எனவே தலைவைேடு அருஞ்சுரம் கடக்க முனே கின்றாள். தன் வீட்டில் இளமையில் செம்பொன்லைாகிய பாத்திரத்தில் பொரியொடு கலந்த பாலினைச் செவிலியர் தரவும் அதனை மிக்கது வேண்டா என மறுத்த தலைவி இப்பொழுது கிழலற்ற ரேற்ற கடத்தற்கரிய பாலே வழியில் தலைவனே தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று நீர்வள மற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மையைக் கொண்ட மிக்க வெப்பத்தையுடைய கலங்கல் ைேரத் தவ்வென்னும் ஒசைபடக் குடிக்க வல்லுகளாகின்றாள்.” ஐங்குறுநாறு: அன்னய் வாழிப்பத்தில் வரும் பாடலொன்று இக் கருத்தினைச் சிறப்புறப் புலப்படுத்தி கிற்கும். இப்பாட்டு. உடன்போய் மீண்ட தலைமகள், நீ சென்ற காட்டு ர்ே இனிய வல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்? எனக்கேட்ட தோழிக்குச் சொல்லியதாகும். அப்பாட்டு வருமாறு :

“ அன்னுய் வாழிவேண் டன்னகம் படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண் டெஞ்சிய கலுழி நீரே.’ “

தன் தோட்டத்து மரத்தில் தொடுத்துள்ள தேன். கூட்டிக் கலந்த பாலிலும் தலைவன் காட்டுத் தழையை யுடைய கிணற்றின் அடியிலுள்ள, மிருகங்கள் உண் டெஞ்சிய கலங்கல்ர்ே இனிமையாக இருந்தது என்று தோழிக்குத் தலைவி கூறும் கூற்றில் தலைவன்மாட்டுத் தலைவி கொண்டுள்ள காதலின் பெருக்கும் ஆற்றலும் புலகிைன்றன.

தன்னுடைய வளம் கிறைந்த செல்வமனேயில் தன்னேப்

பெற்றெடுத்த தாய் ஒருமருங்கு அமர்ந்திருப்ப செவிலித்தாய்

12. குறுந்தொகை: 356 13. ஐங்கு நூறு 203