பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

107

தேன்கலந்த பாற்சோற்றினைப் பொற் கிண்ணத்தில் வைத்துக்கொண்டு. சிறுகோலாச்சி அச்சமூட்டவும், கல் கூர்ந்தார் செல்வமகள் ஆன காரணத்தினால், பசியற்ற காரணத்தாலும் செல்வமனைப் பிறந்த சிறப்பாலும் உண்ண மறுத்துக் காற்சிலம்பு கலீர் கலீர்’ என ஒலிப்பத். தோட்டத்து முல்லைப் பந்தலின் கீழ் ஒடி ஒடி விளையாடும். தலைவி. இன்று புகுந்த வீட்டிலே வறுமை வாட்டிய விலையினும், தந்தை கொடுத்தனுப்பிய கொழுவிய சோற்றினைக் கொள்ளாது திருப்பியனுப்பி விடுகின்றாள் என்னும் சீரிய செய்தியினைப் பூதனர் என்னும் சங்கப் புலவர் கற்றிணைப் பாடலொன்றில் கயமுற வின்றுள்ளார் :

‘’ பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத் தொருகை ஏந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் ருேக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தந்துற்று அரிகரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிந்தொழியப் பக்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்க் தனள் கொல்’ கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள் ஒமுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே.’

உண்டற்குரிய பொழுதில் உணவு இன்மையின், உணவு கிடைத்தபோது பொழுது கோக்காது உண்கின்ற வறுமை

-

14. நற்றிணை 110