இரண்டாம் பகிப்பின்
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாள் என் வணக்கத்திற்குரிய பேராசிரியர் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனர் அவர்களுக்கு அறுபது ஆண்டுகள் ...நிறைந்தது. அவர்தம் வீட்டாரும் தமிழ் நாட்டாரும் அவருக்கு மணிவிழா எடுக்கவேண்டும் என்று விரும்பினர். அவர்தம் பழைய மாணவர் சிலரும் அவர்தம் மணிவிழாக் காண விழைந்தனர். ஆனல் டாக்டர் மு. வ. அவர்கள் உறுதியாக அவ்விழாவினை மறுத்து விட்டார்கள். எனவே எல்லோர் எண்ணமும் ஈடேருமற் போனது.
அதுபோது என் மனத்தில் ஒர் எண்ணம் உதித்தது. அவர் தந்த கொடை எனக்குக் கல்வி, பண்பு, வாழ்வு முதலியனவாகும். கல்விக் கண் தந்த அவர்களே என் ஆராய்ச்சி அறிவிற்குத் துணை கோலியவர் ஆர்ைகள். என்னுடைய எம். லிட்., பிஎச். டி. முதலான பட்டங்கள் அவர் வழிகாட்டலில், மேற்பார்வையில் நிறைவேறின. எனவே அவர்தம் கல்விக் கொடையால் பெற்ற அறிவால் எழுந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்து -ஒரு நூலாக வெளியிட்டு அவருக்குக் காணிக்கை யாக்க வேண்டும் என விரும்பினேன். அவ்வெண்ணத்தை யான் அவர்களிடம் வெளிப்படுத்தியபோது அதனை மறுத்து விட்டார்கள். ஆனாலும் யான் நூல் வெளியிடும் முயற்சி யைப் பாராட்டிக் கட்டுரைகளை ஒழுங்கும் செப்பமும் செய்து