பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110



கிறைந்த கண்கள் கண்டார் பார்வையைக் கட்டுப்படுத்தி மீண்டும் மீண்டும் அவர்களையே பார்க்க வைக்கின்றன. அத்தகு செல்வச் சிருர் மகிழ்ந்து நடைத்தேர் உருட்டி வாழும் நாடு பாழ்பட்டு விடுமோ என்று புலவர் க ல ங் கு கி ன் ரு ர். கழிபேரிரக்கம் கொள்ளுகின்றார். காட்டில் பலர் வாழப் புலவரின் சரநெஞ்சமும் இளகிய சிங்தையும் அங்காட்டில் வாழும் இளஞ்சிருர்பால் சென்றது. குழந்தைச் செல்வத்தின் மாண்பினை மட்டின்றி உணர்த்துகின்ற தன்றாே? அங் கயமான பாடலைக் காண்போம்: *

“ தாழார மார்பின்ை தாமரைக்கண் சேந்தனவால்

பாழாய்ப் பரிய விளிவதுகொல்-யாழாய்ப் புடைத்தேன் இருங்கண்ணிப் த்ங்கட் புதல்வர் கடைத்தே ரொலிகறங்கு நாடு’ கற்பின் செல்வி கண்ணகி மதுரை மாககரை எரிக்க முற்படுமுன் யார் யாரைத் திக்கடவுள் ஒறுக்க வேண்டும்? யார் யாரை விடுத்தல் வேண்டும் என்று கூறும் பொழுது,

பார்ப்பா ஏறவோர் பசுப்பத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறந்தார் பக்கமே சேர்கென்று.”

கூரியதாக இளங்கோவடிகள் கூறுவதனின்றும் குழந்தைச் செல்வத்தின் சிறப்பினை கன்கறியலாம். மேலும் பண்டை காளில் பகைவர்மாட்டுப் படையெடுத்துச் செல்லும் மன்னர் களிடம் ‘அறத்தாறு நுவலும் பூட்கை யொன்று இருந்த தாக நெட்டிமையார் என்னும் பெண்பாற் புலவர் குறிப் பிடுவர். பசுக்கள், பசு நிகர்த்த அந்தணர், பெண்கள்,

1. புறப்பொருள் வெண்பாமாலை : வஞ்சி ; கொற்ற வள் அள 2. சிலப்பதிகாரம் : வஞ்சினமா8ல : 53.55