114
114
இன்பமும் செய்யா காலத்தோடு கூடியிரா பொருளும் அறிய வாரா; ஆயினும் தந்தையர்க்கு அருளுதல் வந்தன பிள்ளைகளுடைய இளஞ்சொல்’ என்று ஒளவையாரும் மக்கட் செல்வத்தின் - மழலை மொழியின் மாண்பினைப் பாராட்டியுள்ளார்:
“ யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க்கு அருள்வர் தனவாற் புதல்வர் தம்மழலை.”* ஒளவையாரின் இப்பாடலைப் பின்பற்றியே திருக் கழுமல மும்மணிக்கோவை யாசிரியர்,
“ எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக்
குறிப்பொடு படாஅது வெறித்தபுன் சொல்லே ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி குழலினு யாழினு மழகிதாம்’ என்று கூறியுள்ளார். திருவள்ளுவர் பெருமானும், “ பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற’ என்று பொருத்தமுறப் புகன்றுள்ளார். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதியைச் சார்ந்த செய்யுளாய்ப் பின்வரும் செய்யுள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளது:
“ பொறையிலா வறிவு போகப்
புணர்விலா விளமை மேவத்
துறையிலா வனசவாவித்
துகிலிலாக் கோலத் தூய்மை
8. புறநானூறு 92 , 1-8 9. திருக்கழுமல மும்மணிக் கோவை : 28 : 2.5
10. திருக்குறள் : 61