115
115
கறையிலா மாலை கல்வி
கலமிலாப் புலமை கன்னர்ச்
சிறையிலா நகரம் போலும்
சேயிலாச் செல்வ மன்றே.’
பொறுமை யில்லாத அறிவு, கலந்துறையாத இளமை, துறையிலாத குளம், துகிலிலாத கோலம், மணமில்லாத மாலை, கல்வி கலஞ் செறியாத புலமை, அரணில்லாத நகரம், சேயிலாத செல்வம் இவை யஜனத்தும் குறைபாடுடையன என்பது நன்கு புலனுதல் வளையாபதி வழிகின்று காணலாம்.
குழந்தைக்கு அம்புலி காட்டி அழுகையை மாற்றுவது என்பதும், உணவு மறுக்கும் குழந்தைக்கு உணவூட்டச் சந்திரனே அழைக்கும் செயலும் கந்தமிழ் காட்டில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருவனவாகும். வினே முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லும் கூற்றில் வைத்து அழகான குடும்பக் காட்சியினைப் புலவர் மாற்றார்கிழார் மகனர் கொற்றங் கொற்றனர் உரைப்பர். நெல்லிக்காய் தின்றவர் உடன் தண்ணிர் குடித்தால் இவிய சுவை உணர்வரன்றாே? அத்தகு சுவை வாய்ந்த சொல்லால் தலைமகள் நிலவைப் பார்த்துப் பேசுகின்றாள். அம்புலியே! நீ என் மகனிடத்து இங்கு வருவையாயின் உனக்கும் தீம்பால் தருவன்’ என மொழிகின்றாள்:
முகிழ்கிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி என்மக ைெற்றி வருகுவை யாயின் தருகுவன் பாலென விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி திதலை யல்குலெம் காதலி புதல்வற் பெயர்க்கும் பூங்கொடி கிலேயே.'’ ‘’ 11.--l-87ജ് 54 17-88