10
நூலிற்கும் 'இலக்கிய அணிகள்’ என்று பெயரிட்டார்கள். நூலினை அச்சியற்றி முடித்து 25-4-1972 அன்று அவர்தம் இல்லம் சென்று அவர்தம் திருக்கரங்களில் நூலின் முதற் படியினை வழங்கினேன். அவர்கள் பெற்று உவந்து என்னை வாழ்த்தினர்கள். யான் எண்ணியவாறு அந்நூலினை அவர்கள் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளாவிடினும்.அந் நூலின் முன்னுரையின் இறுதியில்
“எங்கோ ஒரு சிற்றுாரில் எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு அன்பு காட்டி, தமிழ்ப்பற்று ஊட்டி, பண்படுத்தித் தமிழுலகில் நடமாட வைத்து இந்நிலைக்கு என்னை ஆளாக்கிய-சான்றாண் மைக்கு ஆழி என விளங்கும் என் பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனர் அவர்களை இந்த மணியான நேரத்தில் நன்றியுடன் நினைந்து வணங்குகின்றேன். அவர்கள் அளித்த அறிவுச் செல்வத்தின் பயனே இந்நூல் என்று கூறி அமை கிறேன்"
என்று எழுதியிருந்தேன். இந்நூல் தமிழாராய்ச்சி குறித்து 1972 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் சிறந்த நூலெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் முதற். பரிசாக இரண்டாயிரம் ரூபாயினைப் பெற்றது. என் பேராசிரியப் பெருந்தகை இருந்திருந்தால் பெரிதும் மகிழ்ந் திருப்பார்கள். யான் பேறு பெற்றிலேன்.
இந்நூலினை அடக்கத்துடன் அவர்தம் இனிய நினைவிற்குக் காணிக்கையாக்கி வணங்குகின்றேன்..
தமிழகம் சென்னை-29 சிறிய எழுத்துக்கள் சி. பா 25–9–1977