பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118

யெடுத்து, அதன் வயிற்றினுள் கன்முத்துக்களே யிட்டு, உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வர்க்குக் கிலிகிலியாட்டி மகிழ்கின்றதாம் மகாஅர் அன்ன மந்தி.”

“ மகாஅர் அன்ன மந்தி மடவோர்

ககாஅர் அன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கி தோள்புறம் மறைக்கும் கல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி யாடும்.'’ ‘’ இத்தகு சிறப்பியல்புகள் பலவற்றினை கந்தமிழ் இலக்கியங்கள் குழந்தைச் செல்வத்திற்குக் குறைவற. அளித்த பான்மையினே நன்கு காணலாம். திருவள்ளுவர் தனி அதிகாரமே வகுத்துக் குழந்தைச் செல்வத்தின் மாண்பினை வாயாரப் போற்றியுள்ளார். இடைக்காலத்தில் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பாடிய பாடல்கள் பலவும் கயமும் சுவையும் கெழுமியனவாகும். பிற்காலத்தில் சிறுபிரபந்த வகைகளில் ஒன்றாகப் பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகை முகிழ்த்தது. இறைவனேயே குழந்தையாக எண்ணித் திங்கள்தோறும் குழந்தையின் வளர்ச்சியினையும் வாழ்வினையும் படிப்படியே வகுத்து வகை பெறக் கூறிக் கவிஞர்கள் பாடிய பாடல்கள் கற்றாேர்க்குக் கழிபேரின்பக் தருவனவாகும். பாரதியாரின் கண்ணம்மா. என் குழந்தை'ப் பாடல்களும், பாரதிதாசனரின் குடும்ப விளக்கும் குழந்தைச் செல்வத்தின் மாண்பினைக் குறைவறக் கூறி நிற்பனவாகும். குழந்தைகளின் கொள்ளேயழகினிலும், கொட்டும் மழலையிலும், சுட்டும் சுடர் விழிப் பார்வையிலும், பட்டுத்திருமேனியிலும், ஒட்டுறவின் உறுதியிலும் கம்மை காம்ே மறக்கின்றாேமே, அந்த இன்பத்திற்கு கரேது’ வாழ்க மழலைச் செல்வங்கள்!

18. சிறுபாணுற்றுப்படை : 56-61